பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 ம.பொ.சிவஞானம் பயப்பட வேண்டாம். முஜிபுர் பிரிவினை வாதியல்ல. அண்மையில் நடந்த நிகழ்ச்சியைக்கூட காங்கிரஸ் நண்பர்கள் மறந்து விடுகின்றார்கள். என்ன செய்வது இதற்கு? முஜிபுர் அவர்கள் மாநில சுயாட்சிதான் கேட்டார். யாகியாகான் அவரைச் சிறைப்படுத்திய நேரம் வரையில் அவர் மாநில சுயாட்சிதான் கேட்டார். பிரிவினையல்ல. மாநில சுயாட்சியைக் கேட்டுக் கொண்டேதான் சிறை சென்றார். ஆனால், திரும்பி வரும்போது மக்கள் படைத்து விட்ட சுதந்திர வங்க தேசத்திற்கு வந்தார். சுதந்திர வங்கத்தை முஜிபுர் ரஹ்மான் கேட்கவில்லை. அவர் கேட்ட தெல்லாம் சுயாட்சி வங்கந்தான். ஒன்றைச் சொல்லுகின்றேன்; அகந்தையாக அல்ல; அடக்கத்தோடு! நான்கு கோடித் தமிழர்களும் முஜிபுர் ரஹ்மான்களாக மாறினாலும் தமிழ்நாடு சுதந்திர நாடாகிவிடாது. ஆனால், ஒரு இந்திராகாந்தி யாகியாகான் ஆகிவிட்டால் இது சுதந்திர நாடாகிவிடும். ஆளுவோருக்கு எச்சரிக்கை விட்டுச் செல்ல வில்லை. தேசபக்தியின் விளைவாகச் சொல்லுகிறேன். முஜிபுர் என்ற வார்த்தையைக் கேட்டுப் பயப்படவேண்டாம். நான் அப்படிச் சொன்னவர்களைக் கண்டிக்கிறேன். ஏன் கலைஞர் அவர்களை மட்டும் சொன்னார்கள் 'முஜிபுர்' என்று? என்னையும் ஏன் அவரோடு சேர்த்திருக்கக்கூடாது ? நான்கு கோடித் தமிழர்களையும் ஏன் சேர்த்திருக்கக்கூடாது ? ஒவ்வொரு தமிழனும் முஜிபுர் ரஹ்மான் ஆவான் என்று இந்த மன்றத்தில் சொல்ல எனக்கு உரிமை உண்டு. துணிவும் உண்டு. பிரிவினையை விரும்பாதவர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள். சிறையிலிருந்து அவரை விடுவித்தபின் பூட்டோ என்ன செய்தார்? அவரைச் சிறையில் இட்ட அவர் கோரிய சுயாட்சிக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட-யாகியாகான் வங்கத்தை இழந்தார். ஆனால், அவரை விடுதலை செய்தவுடன் விருந்தினர் மாளிகையில்