பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 25 வைத்துக் கொண்டு, "நாங்கள் சுயாட்சி கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் வங்கம் பிரிந்து போனதை உறுதிப்படுத்தி விடாதீர்கள்; வங்கம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்று பூட்டோ கேட்டுக்கொண்டார். தாமே விரும்பி. பல நாள் அவரை விருந்தினர் மாளிகையில் வைத்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டார் பூட்டோ. அப்போது முஜிபுர் என்ன சொன்னார்? 'என் தேச மக்களைக் கேட்டுத்தான் நான் எதையும் சொல்ல முடியும்: அவர்களைக் கலக்காமல் நான் எதையும் சொல்ல முடியாது' என்றார். சுதந்திர வங்கம் வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. சுதந்திர வங்கதேசம் என்பது மக்கள் படைப்பு. பயப்படுகிறீர்களே. இன்றைக்கு முஜிபுர் ரஹ்மான் என்ற வார்த்தையைக் கேட்டு? காந்தியடிகளின் கீழ் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களா இவ்வளவு பயந்தாங்கொள்ளிகளாகி விட்டீர்கள்? ஆச்சரியப்படுகிறேன். அன்றைக்குக் காந்தியடிகள் என்ன சொன்னார்கள்? மாநிலங்களுக்கு எத்தகைய சுயாட்சி வேண்டும்' என்று செய்தி நிருபர்கள் அடிகளாரைக் கேட்ட நேரத்திலே. இந்தியா முழுவதற்கும் எத்தகைய சுதந்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேனோ, அத்தகைய சுதந்திரம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இருக்க வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஆனால். 'சுதந்திரம்' என்பதன் பொருள் பிரிந்து போவது என்பதல்ல" என்றார். அடிகளின் இலக்கணப்படிப் பார்த்தால், சுயாட்சி என்பது பிரிந்து போய் விடுவதல்ல; இந்தியாவுடன் இணைந்து இருக்க வேண்டும். "பிரிந்து போகும் உரிமையைத் தவிர மாநிலங்களுக்கு வேறு எந்த உரிமையும் வழங்கலாம்" என்று காந்தியடிகள் சொன்னார்கள். அவர் பயப்படாதபோது இன்றைக்கு நீங்கள் எதற்காகப் பயப்படுகின்றீர்கள்? இது எனக்கு வியப்பாகவும் இருக்கிறது. வேதனையாகவும் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினையை ஏன் விட்டு விட்டது? இராஜாஜி அவர்களின் வேண்டுகோள் ஒன்றை இங்கு