பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் என்பதைக் காட்டுகின்றது. பிரதேசங்களின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகக் குறைத்து அதிகாரங்களை மேலும் மேலும் மத்திய அரசிடம் குவிக்கும் முயற்சி நடை பெற்று வருகிறது. "மானியம் பெறும் அமைப்புக்களின் நிலைக்கு மாநிலங்களெல்லாம் அதிவேகமாகத் தாழ்த்தப்படுகின்றன. மத்திய அதிகாரம் விஸ் தரிக்கப்படுவதை விரும்புவோருக்கு இது பிடித்தமாய் இருக்கக் கூடும். ஆனால், இது மணல் வீடாகவே முடியும். அதிக காலம் நீடித்து நிற்க முடியாது.' "வெளிநாட்டுறவு, பாதுகாப்பு ஆகிய துறைகள் தவிர, இதரவற்றில் சமஷ்டிக்குள்ள அதிகாரங்கள் மிக மிக அற்பமான அளவுக்குக் குறுகிவிட வேண்டும். அதே நேரத்தில், மாநிலங் களுக்குள்ள அதிகாரங்கள் அதிகமாக வேண்டும்." 27 இதை நான் எடுத்துக் காட்டுவது இராஜாஜி அவர்கள் சொன்னதற்காக சுயாட்சி கேட்கிறோம் என்பதற்கல்ல: விடுதலைக்காகப் போராடாதவர்கள் சுயாட்சி கோரினால், அது பிரிவினைக் கருத்து; நேற்று பிரிவினையைக் கேட்டவர்கள் இன்றைக்கு அதை விட்டுவிட்டு சுயாட்சி கேட்டாலும் அதையும் பிரிவினை என்று சொல்லுகின்றீர்களே. அதனை மறுப்பதற் காகத்தான்! இராஜாஜி அவர்கள் என்ன கேட்கிறார்கள்? யார் இராஜாஜி? நமக்குத் தெரியும் அவர் யார் என்று அவரது தேசபக்தியை யாராவது எள்ளளவுக்காவது சந்தேகிக்க முடியுமா? இன்னும் சொல்லப்போனால், விடுதலைக்குப் பிறகு எழுதி முடிக்கப்பட்ட நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலே கவர்னர்