பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 ம.பொ.சிவஞானம் ஜெனரல் என்ற அந்தஸ்தில் இருந்து கையெழுத்திட்டவர் - அந்த சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் - சொல்லுகின்றார். இந்தக் கருத்துக்களை! டி.டி கிருஷ்ணமாச்சாரி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தைப் படைத்த கர்த்தாக்களிலே ஒருவர். அவர் சொல்கிறார்! "டெல்லிக்குக் காவடி எடுப்பதாகக் கூறப்படும் புகாரில் உண்மை இல்லாமல் இல்லை. மாநில மத்திய அரசுகளிடையே அதிகாரங் களைப் பங்கீடு செய்த பொழுது இருந்த நிலை இப்பொழுது இல்லை. பிரத்தியட்ச நிலைமையில் புதிய சங்கடங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் போக்க மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும். இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்துவது அவசியம்." இது. 6-5-1962 ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கூட்டத்தில் டி.டி.கே. பேசியது. அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவரே அதைத் திருத்த வேண்டுமென்று சொல்லுகிறார். நம்முடைய மதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய காமராசர் சொல்லுகிறார்: "மத்திய சர்க்காரில் ஒரு கட்சி ஆட்சி, மாநிலங்களில் வேறு கட்சிகளின் ஆட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படும் என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்க்கவில்லை. (எதிர்பார்க்காதது அவர்கள் செய்த தவறு.) "இன்று அந்தப் புதிய நிலை உருவாகி விட்ட படியால் மத்திய - மாநில உறவு பற்றியும்