பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 31 நம்முடைய எதிர்கட்சித் தலைவருக்கு மிக்க வேதனை யோடு ஒன்றைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்; நான் உங்களோடு சேர்ந்து பாடுபட்டவன். நான் பிறந்து, எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து தமிழை நேசித்து வருகிறேன். 'பிறந்து மொழி பயின்ற நாளெல்லாம் சிறந்து உன் சேவடியே சிந்திக்கப் பெற்றேன் என்று தெய்வத்திடம் கூறுகிறார் காரைக்கால் அம்மையார். நானும் பிறந்து, பின் மொழி பயின்ற நாள் முதற்கொண்டு தமிழ் அன்னையின் சேவடியே சிந்திக்கப் பெற்றேன். ஆகஸ்டுப் புரட்சியில் ஈடுபட்டு மத்திய மாநிலச் சிறையில் இருந்தேன். அப்போது, 14 ரூபாய் சம்பளம் பெற்ற அச்சுத் தொழிலாளியாக - பரம ஏழையாக - இருந்தேன். ஏழ்மைக்குரிய அந்தத் தொழிலையும் தூக்கி எறிந்துவிட்டு, வயது வந்த ஒரே தங்கையையும். இளம் தம்பியையும், வயது முதிர்ந்த பெற்றோரையும் ஆண்டவனே காப்பாற்றட்டும் என்று சொல்லி விட்டுவிட்டு எதிர்கட்சித் தலைவர் அவர்களோடு சேர்ந்து சிறை புகுந்தேன். நான் இருந்த சிறையில் மின்சார விளக்குகள் இல்லை; மின்சார விசிறி இல்லை. 120 டிகிரி வெயில் காய்கின்ற இடம்; குளிரிலும் வெயிலிலும் வேதனைப் பட்டுக் கொண்டு இரவிலே 'பாரா உஷார், பாரா உஷார்' என்று மராட்டிய மொழியில் காவலர் போடும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டு வயிற்று வலியோடு நித்த நித்தம் போராடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் - வயிற்று வலியோடு - அந்தச் சிறையில் துணிவுடன் இருக்க என்னால் எப்படி முடிந்தது? இந்தியா சுதந்திரம் பெற்றால், நமது தமிழ்நாடு சுயாட்சி பெறும். இந்தியா சுதந்திரம் பெற்றால், நமது தாய்நாடு தமிழ் மொழியில் ஆளப்படும்; கடையகனான உழவனும் கண் விழிப்பான். 'பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார் என்று பாரதி சொன்னானே.