பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 ம.பொ.சிவஞானம் அதை நினைத்தேன்; தமிழ் மொழியில் ஆளப்பட வாய்ப்பு கிடைக்கும்; அச்சுத் தொழிலாளியான அடியேனுக்குக்கூட விமோசனம் கிடைக்கும் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின்மீது ஆணையிட்டுக் கேட்கிறேன்; இதுதானா நாம் கேட்ட சுதந்திரம்? இதற்குத்தானா நாம் பாடுபட்டோம்? வீரபாண்டியக் கட்டபொம்மன் சுதந்திரம் கேட்டது பாஞ்சாலங்குறிச்சிக்குத்தான்! அந்தச் சுதந்திரம் இந்தியா பூராவுக்கும் வளரட்டும் என்ற எண்ணத்தில்தான் கேட்டான். ஜான்ஸி ராணி சுதந்திரம் கேட்டது ஜான்ஸி சமஸ்தானத்திற்கு மட்டும்தான். தாத்தியா தோபேயும் நானாவும் போராடியது. அவர்கள் இழந்துவிட்ட மஹாராஷ்டிரத்தைக் கைப்பற்றத்தான். திப்பு சுல்தான் போராடியது மைசூர் (கன்னட) ராஜ்யத்தைக் காப்பதற்காகத்தான். சுதந்திர இயக்கம் எப்படி வளர்ந்தது? "வங்கம் வங்காளியருக்கே" என்பதில்தான் பிறந்தது. வங்காளத்தை கர்சான் இரண்டாகத் துண்டாடிய போது, "வங்கம் வங்காளியர் களுக்கே; அதைத் துண்டாடாதே" என்று தேசபக்தர்கள் சொன்னார்கள். மொழிவழி இன உணர்ச்சியோடுதான் இந்தியச் சுதந்திரப் போரில் இணைந்தது வங்கம். இன்னும் என்ன நடந்தது? காங்கிரஸ் கட்சி மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிப்பதில் கவனம் செலுத்தியது. சுப்பிரமணிய பாரதியார் சொல்கிறார் - சுதந்திர நாட்டை கவிஞர் கற்பனைசெய்து பார்க்கிறார். தாயின் மணிக்கொடி பறக்கிறதாம்; ஆம், அவர் கற்பனையில் பார்க்கிறார் தாயின் மணிக்கொடி பறக்கிறதை! அந்தக்கொடியின் கீழே இந்திய ராணுவம் அணி அணியாகப் பிரிந்து நிற்கிறதாம். அது. இந்து அணி. இஸ்லாமியர் அணி. சீக்கியர் அணி, கிறிஸ்தவர் அணி என்று நிற்கிறதா? - இல்லை, ஐயர் அணி, ஐயங்கார் அணி. முதலியார் அணி. நாடார் அணி என்று நிற்கிறதா? - இல்லை.