பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 33. வடக்கு அணி, தெற்கு அணி, மேற்கு அணி, கிழக்கு அணி - என்று நிற்கிறதா? அப்படியும் இல்லை. அது எப்படி நிற்கிறதாம்? செந்தமிழ் நாட்டுப் பொருநர்; சேரத்து வீரர்; சிந்தை துணிந்த தெலுங்கர்: கன்னட வீரர்: பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னர் பார்த்தன் முதற்பல வாழ்ந்தர் நன்னாட்டார்; துஞ்சும் பொழுதினும் தாயின் பதத்தொண்டு நினைத்திடும் வங்கத்தினோர்-என. இனவாரி அணி பிரிந்து நிற்கிறார்களாம்! "அந்த அற்புதக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ!" என்கின்றார் கவிஞர். ராணுவத்தையும் மொழிவாரி இனங்களாகப் பிரித்து சுதந்திரக் கொடியின் கீழ் நிறுத்துகிறார் பாரதி. யாரோ கேட்பது போன்று அவருடைய இதயத்தில் ஒரு எதிரொலி எழுந்தது. இவ்வாறு மொழிவாரி ராணுவத்தை அமைத்தால் நாடு அழிந்து விடாதா? இனவெறியர்களை நம்பலாமா?' என்று யாரேனும் அவரைக் கேட்டிருக்கலாம். அவர்களுக்கு பாரதியார். "நம்பற்குரியர் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்' என்கிறார். டெல்லியில் இருக்கின்றவர்களுக்கு மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் இல்லை என்று சொன்னால், டெல்லியில் இருக்கின்றவர்களுக்கு ஏகாதிபத்தியப் போக்கு இல்லையென்று சொன்னால். என்னுடைய இன உணர்ச்சிக்கு அவர்கள் எதிரியில்லை என்று சொல்லட்டும். அவர்கள் தேச பக்தியை நான் நம்புகிறேன். அவர்கள் என்னுடைய இன உணர்ச்சியை, தேச பக்தியை மதிக்கட்டும்; நம்பட்டும். இப்பொழுதுள்ள பிரச்சினை ஸ்டேட் சென்ட்ரல் ரிலேஷன்ஷிப் அல்ல அதாவது. மைய - மாநில உறவுப் பிரச்சினை அல்ல. இது மொழிவாரி தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினை. நண்பர் கு.மா. பாலசுப்பிரமணியம் நேற்று இங்கு சொன்னது போல், சுயாட்சி கேட்பது மொழிவாரித்தேசிய இனங்களுடைய பிறப்புரிமையாகும். இந்தியாவில் ஏதேனும் ஒரு சட்ட-3