பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 35 நம்முடைய - கூட்டாட்சியில் நம்மால் பார்க்க முடிகிறது. உத்திரப்பிரதேசத்திலிருந்து வருகின்றவர்களிடமும், ஹரியானா மத்திய பிரதேசங்களிலிருந்து வருகின்றவர்களிடமும் அந்த டெல்லி செக்ரேட்டேரியட்டில் இருக்கின்ற சாதாரண சிப்பந்திகள், தலைமை அதிகாரிகள் உணர்வு பூர்வமான உறவைக் காட்டு கிறார்கள். அந்த உறவு நம்மிடம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இது பிறப்பு வழியால் ஏற்படுகின்ற வேற்றுமை. ஆகவே. அதிகாரப் பங்கீட்டின் மூலமாகத்தான் இதைச் சமாளிக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். நேற்றுகூட நண்பர் திரு. அப்துல் வஹாப் சொன்னது போன்று காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் ஆட்சி இங்குதான் நடக்கிறது. வேறு கட்சிகளின் துணை இல்லாமல்! ஆகவே எதிர்க்கட்சி ஆட்சி உள்ள மாநிலம் சுயாட்சிக் குரலைக் கிளப்புகிறது. இனி மாநிலங்களில் ஆட்சிக்கு வருகிற எதிர் கட்சிகளெல்லாம் இப்படித்தான் கிளப்பும் என்பதற்கு இதுவே அத்தாட்சி. மற்ற மாநிலங்களிலெல்லாம் கேட்க வில்லை; நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?' என்பதிலே என்ன நியாயம் இருக்கிறது? எப்படி, ஆளுகிற காங்கிரஸ் கட்சியிடமுள்ள மாநிலம் சுயாட்சி கேட்க முடியும்? அரிசி கேட்டதற்கே மந்திரி சபை கவிழ்ந்து விட்டதே குஜராத்திலே! இதை நான் சொல்லவில்லை. குஜராத் முதுல்வர் சிமன்பாய் படேல் சொன்னார். கட்சிக் கட்டுப்பாடு மூலம் மத்திய அரசின் பயமுறுத்தல் இல்லாத மாகாணம் இது. ஆகவே, இங்கு சுயாட்சி உணர்ச்சி பிய்த்துக்கொண்டு வருகிறது. இன்னென்று; ஏறக்குறைய நாம் சோசலிசத்தைக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டு விட்ட காலம் இது. நான் கேட்கிறேன். மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருக்கிற நிலையில் சோசலிசம் வரும் என்று சத்தியமாக நம்பமுடியுமா? இதுபற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தலைவர் திரு. காமராசர் அப்படி நம்புகிறாரா? அங்கே மத்தியில் அதிகாரங்கள்