பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 37 மொழியாக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது, அதையும் இங்குள்ள எல்லோரும் படித்தாக வேண்டும். நான் கேட்கிறேன்; ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை நம்மவர்கள் ஆங்கிலத்தைக் கட்டாய மொழியாகப் படித்ததால் என்ன ஆனது? நம்முடைய சிவிலிசேஷன் மாறியது. நாம் ஐரோப்பிய நாகரிகத்திற்கு அடிமையாகிவிட்டோம். உ இந்த நிலைமையில் ஆங்கிலத்திற்குப் பதில் ஹிந்தி வருமானால் - ஹிந்தியர்களுக்கும் நமக்கும் நாகரிகத்தில் சிறிதளவு வேறுபாடு உண்டு என்பதை மறக்கவேண்டாம் - நாம் வடவர் நாகரிகத்திற்கு அடிமையாவோம் இந்தியைக் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை கட்டாய பாடமாகப் படித்தாலொழிய மத்திய சர்வீசில் நம்மவர்கள் உயர்தர வேலைக்குப் போக முடியாது. இப்போது ஆங்கிலம் படித்த ஆங்கிலேயனோடு நமக்குப் போட்டியில்லை. ஆங்கிலேயன் வெளியேறி விட்ட பிறகு வடவரோடு இதிலே நாம் சம நிலையில் இருக்கிறோம். இந்தி வருமானால், இந்தி படித்த இந்திக்காரன் திறமையை இந்தி படித்த இந்திக்காரன் அல்லாத தமிழன் பெற முடியாது. இந்நிலையில், மத்தியில் இந்தி ஆட்சி மொழியாக வருமானால். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நான், எதிர்கட்சித் தலைவரவர்களுக்கும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஒன்று சொல்லுகிறேன். தேச பக்தியில் ஊறிய நான் இந்தியை எதிர்ப்பதற்கு இதுதான் காரணம், ஆங்கில ஆதிக்கம் தமிழகத்தில் இன்றே அகற்றப்பட வேண்டும்மென்று சொல்கிற நான். மத்தியில் மட்டும் ஆங்கிலம் ஒரு இடைக்காலத்திற்கு இருக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்றால், அதற்குக் காரணம் இதுதான்: கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்கி, அதன் ஆதிக்க நிலையை ஏற்பதுபற்றி என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.