பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 ம.பொ. சிவஞானம் இப்போது என்ன நடக்கிறது? அன்று ஆதரித்த கட்சிகள் இன்று மனமாற்றம் அடைந்துவிட்டன. ஆக, நாம் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதனால், அது நம்மையே பலவீனப்படுத்துகிறது என்பதை நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் தாமதிக்க அவசியமில்லை. தேவையில்லை என்று எண்ணுகிறேன். முதல்வர் அவர்கள் சுதந்திரம் உள்ள கட்சிக்காரர். நான் தோழன்தான்; என்றாலும், வராந்தாவில்தான் இருக்கிறேன். அவர்கள் மாளிகைக்குள்ளே இருப்பவன் அல்ல. சில நேரங்களில் கூப்பிடுகிறார்கள்; அப்போது உள்ளே போகிறேன். திரும்பி வெளியே வந்து விடுகிறேன். தி.மு.க. வினர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 19 ஆம் தேதி மாநில சுயாட்சி நாள் கொண்டாடினார்கள். அப்போது, தாங்களே தான் கொண்டாடிக் கொண்டார்கள். நான்கூட நினைத்தேன். 'நம்மையும் விருந்தாளியாகவேனும் அழைத்திருக்கலாமே' என்று. லிமிடெட் நம்பர் வைத்து விருந்து நடக்கிறது போலும் என்று நினைத்துக்கொண்டு ஒரு விதமாக ஆறுதல் அடைந்தேன். செழியன் குழுவை நியமித்து, ராசமன்னார் பரிந்துரை பற்றி ஆராய்ந்து அறிக்கை தரச் செய்தார்கள். என்னையும் அந்தக் குழுவில் சேர்ந்திருக்கலாம் - சேர்க்கவில்லை. எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று எண்ணினார்களோ என்று நான் ஐயுற்றேன். கலைஞர் அவர்கள் அப்படி எண்ணமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு யாரேனும் சொன்னார்களோ என்று ஐயுற்றேன். செழியன் குழுவினர் என்னை சாட்சியத்திற்கு அழைத் தார்களா என்றால். அதுவும் இல்லை. இராசமன்னார் குழுவே என்னை சாட்சியத்திற்கு அழைத்திருக்கிறபோது, முன்னாள் தலைமை நீதிபதிகளே என்னை அழைத்திருக்கிறபோது, செழியன் குழுவினர், இராசமன்னார் குழு பரிந்துரைபற்றி என்னுடைய கருத்தைத் தெரிந்து கொண்டு தங்கள் அறிக்கையைத் தயாரித் திருக்கலாம். அறிக்கை தயாரித்த பிறகாவது அதன் பிரதி ஒன்றை