பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 41 எனக்கு அனுப்பியிருந் திருக்கலாம். இதுவரை செழியன் குழுவின் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதான் என்பதில் உள்ள உண்மையை நான் உணர முடிகிறது? அவர்களுக்கு ஆணையிடுகிற அதிகாரம் எனக்கு இல்லை. 27-4-74 அன்று சட்ட மேலவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் மீதான தமது ஒரு மணிநேரப் பேச்சை முடிக்கையில் உணர்ச்சிப் பெருக்குடன் மாண்புமிகு ம.பொ.சி. கூறியது வருமாறு: யாரோ சொன்னார்களாம். ம.பொ.சி.யின் கொள் கையைக் கலைஞர் எடுத்துக் கொண்டார்'" என்று ஆணவம் இல்லாமல் மட்டுமல்ல - அடக்கத்தால் மட்டுமல்ல சத்தியமாக வும் சொல்கிறேன்: இந்தத் தத்துவம் எனக்குச் சொந்தம் அல்ல. இது, அகில உலகின் அரசியல் சாத்திரம் - சரித்திரம் 1981-ல் அமெரிக்காவில் தோன்றிய சமஷ்டி சகாப்தம், பின்னால் விரிவடைந்து வருகிறது. நாடு நாடாகப் பவனி வருகிறது. அதற்காக ஒரு இயக்கத்தைத் துவக்கினவன் என்ற சிறப்பு எனக்கு இருக்கலாமே யொழிய. சுயாட்சித் தத்துவமே எனக்கு ஏகபோகமல்ல. கலைஞர் என் கையில் இல்லை. நான் கலைஞர் கையில் இருக்கிறேன். நான் கலைஞரை வேண்டுகிறேன் - அவரது ஆட்சியையும் வேண்டுகிறேன். இந்தப் பிரச்சினையில் எப்படி வேண்டுமானாலும் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்கோ கிடந்த எளியவனாகிய என்னை அழைத்து வந்து செக்ரடேரியட்டில் எனக்கு ஒரு அறை (ரூம் கொடுத்து) என்னை இங்கு வைத்திருக்கிறீர்கள். உங்களை வேண்டுகிறேன்; நான் இப்படி நெடு நாட்கள் அறைக்குள் அடைபட்டுக் கிடக்க விரும்ப வில்லை. அந்த அறையை விட்டு, இந்த மாநில சுயாட்சிக்காகச் சிறை புகவே விரும்புகிறேன். உங்கள் ராஜ்யத்தின் சிறைச் சாலைகளிலே எனக்கும் என் தோழர்களுக்கும் இடம் பார்த்து வையுங்கள்: அந்தச் சிறைச்சாலைகளின் அறைகளைத் திறந்து