பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிவஞானத்தோடு சேர்ந்தது தவறா? முதல்வர் கலைஞர் கேள்வி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் 27-4-74ல் சட்ட மேலவையிலும், 28-4-74ல் மயிலைப் பொதுக்கூட்டத்திலும் மாநில சுயாட்சி பற்றிப் பேசியபோது தமிழரசுக் கழகம் பற்றியும் தலைவர் ம.பொ.சி பற்றியும் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது: 'அண்ணா எழுதிய உயிலிலே கூட அதிக அதிகாரம் தானே கேட்டார். மாநில சுயாட்சி கேட்டாரா? - இல்லை இந்தக் கருணாநிதிதான் வெட்கங் கெட்டுப்போய் மாநில சுயாட்சிக் கொள்கையை ம.பொ.சி. யிடம் கடன் வாங்கிக் கொண்டார் என்றார்கள். நான் அதற்கு வெட்கப்படவில்லை. நல்லவற்றைக் கடன் வாங்குவது தவறல்ல. ம.பொ.சி.யிடம் போயும் போயும் இந்தக் கொள்கையைக் கடன் வாங்கினார்கள் - என்றார்கள், நான் அவரை சிலம்புச் செல்வர் என்றுதான் அழைப்பது வழக்கம்-சிவஞானத்திடத்திலே போய் இதைக் கேட்கலாமா? சிவஞானத்தோடு சேர்ந்து கேட்கலாமா? - என்கிறார்களே - பிறகென்ன, ஞானத்தோடு சேர்ந்து கேட்காமல் அஞ்ஞானத்தோடு சேர்ந்தா கேட்க முடியும்? அதுவும் சாதாரண ஞானமல்ல. சிவஞானம்! அன்பே சிவம். ஞானம் என்றால், அறிவு. அன்போடும் அறிவோடும் நான் மாநில சுயாட்சி கேட்கிறேன். மாநில சுயாட்சி சிலம்புச் செல்வரவர்களால் நீண்ட நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிற - வலியுறுத்தப்பட்டு வருகின்ற உன்னதமான கொள்கையாகும்.