பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுயாட்சிப் போர்பற்றி சட்டப் பேரவையில் விவாதம் "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரி திரு.ம.பொ.சிவஞானம் அவர்களால் நடத்தப்பட இருக்கும் போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை" என்னுந் தலைப்பில் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது 19-8-69ல் சட்டப் பேரவையில் நடந்த விவாதம். மாண்யுமிகு பேரவைத் தலைவர் : திரு. சீமைச்சாமி அவர்கள் ஓர் ஒற்றிவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக் கிறார்கள். அதில், 'மாண்புமிகு ம.பொ.சிவஞானம் அவர்கள் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டி நாளை முதல் போராட்டம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை விவாதிக்க சபையை ஒற்றிவைக்க வேண்டுகிறேன்' என்று கொடுத்திருக்கிறார்கள். இதே கருத்துப் பட. திரு.ஆ.கு.சுப்பையா அவர்களும் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். அதை இன்று எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை இருக்குமா என்ற நிலையிலே வேண்டாமென்று கூறியிருக்கிறேன். இருப்பினும் அவர்களும் இந்தத் தீர்மானம் எப்படிப் பேரவையில் விவாதத்திற்கு வரக்கூடியது என்பதைப் பற்றிச் சுருக்கமாக விளக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். திரு.கரு. சீமைச்சாமி: சார், மதிப்பிற்குரிய திரு.ம.பொ.சி. அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பாகவே மாநில சுயாட்சிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சட்ட மன்றத்திலேயும் அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இது சம்பந்தமாகக்