பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 49 கூறுகிறபோது, காலம் வரும்; நாங்களும் கலந்துகொள் வோம் என்று கூறியிருக்கிறார்கள். திரு.ம.பொ.சி. அவர்கள் முதலமைச்சர் அவர்களுடன் கலந்து பேசியபோது ஒரு நாளைக்கு அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு அதற்கு மேலே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று பத்திரிகைகளிலே வந்திருக்கிறதில், சென்னையிலே தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக் கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்ததை மத்திய அரசுக்குத் தெரிவித்து இருக்கிறார்களா? மாநில அரசாங்கம் இதைப்பற்றி ஒரு தீர்மானத்தைப் போட்டு மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வார்களா? தொடர்ந்து போராட்டம் நடத்தினால் அதனால் ஏற்படக்கூடிய சூழ்நிலை களையொட்டி - நடவடிக்கைகள் எடுப்பது பற்றி விவாதிக்க இந்தச் சபையின் பிற நடவடிக்கைகளை ஒற்றிவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள் கிறேன். திரு.ஆ.கு.சுப்பையா : பேரவைத் தலைவர் அவர்களே. தமிழரசுக் கழகம் நடத்த இருக்கின்ற போராட்டம் குறித்து நானும் இந்தச் சபையினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். இது மிக முக்கியமான அவசரமான விஷயமாகும். மாநிலங் களுக்குப் போதுமான அதிகாரம் இல்லாமல் இன்றைய தினம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசாங்கத்தைத்தான் கேட்கக் கூடிய நிலைமையில் இருக்கிறோம். மாநிலங்களுக்கு எந்த அளவுக்குப் போதுமான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். மாநிலங்கள் சுயேச்சையாக.... மாண்புமிகு பேரவைத் தலைவர் : சுருக்கமாகச் சொல்லுங்கள் டீட்டெய்ல்ஸுக்கு எல்லாம் போக வேண்டாம். திரு.ஆ.கு.சுப்பையா : மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதை எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன. இந்த முறையிலே நம்முடைய தமிழக அரசு இது சம்பந்தமாக தீர சட்ட-4