பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 53 அறிவித்திருக்கிறார்கள். இப்போது. கூட நான் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் - நான் அன்று கேட்டுக்கொண்டதைப் போல் - இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று. மூவர் குழு முடிவுக்குப் பிறகு அனைவரும் இணைந்து, நம்முடைய மாநிலம் மாத்திரமல்லாது எல்லா மாநிலங்களும் இணைந்து நின்று வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைப் பெற தகுந்த யோசனைகளைச் செய்து அதிலே ஈடுபடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் இப்போது தேவையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ம.பொ. சிவஞானம் : மாண்புமிகு தலைவர் அவர்களே! இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒத்திவைப்புத் தீர்மானங்கள் பற்றியும் முதல்வரவர்கள் வெளியிட்ட அறிக்கை பற்றியும் விளக்கமாக இரண்டொன்று சொல்ல நிற்கிறேன். ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்து அரசின் கவனத்தைக் கவர்ந்த அன்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பெருமதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் 'ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி, அவர்கள் ஏற்கவில்லை என்றால் தொடர்ந்து போராடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஓரளவுதான் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இதிலே ஒரு அடிப்படைக் குறைபாடு இருப்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். என்னென்ன அதிகாரங் களைக் கோருவது என்று நிபுணர்கள் முடிவு செய்வது எப்போது என்றால், கொள்கை ரீதியில் சுயாட்சிக் கோரிக்கையை மத்திய அரசு ஒப்புக்கொண்டால்தான். முதலமைச்சர் அவர்கள் நிலைக்கு வசதியாக இருக்க வேண்டுமென்பதற்காக 'சுயாட்சிக் கோரிக்கையை கொள்கையளவில் ஒப்புக்கொண்டால் போதும்'