பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 ம.பொ.சிவஞானம் என்று பிரதமருக்கு எழுதினேன். இன்னும் பதில் வரவில்லை. மத்திய அரசும், அதை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியும். இந்த மாநில சுயாட்சிக் கிளர்ச்சியைப்பற்றிக் கூறும்போது, 'பிரிவினைக் கிளர்ச்சிக்கு இது முன்னோடி, அடையாளம் என்ற முறையிலே கூறி, அடிப்படையிலே நமது தேசபக்தியையே சந்தேகிக்கின்றார் கள். அப்படி, பிரிவினைக் கொள்கைக்கு முன்னோடி என்று சொல்லும் ஆட்சியிடம் நிபுணர் குழுவின் அறிக்கையை அனுப்புவதால் என்ன பயன்? இதைப்பற்றி நிபுணர் குழுவினருக்கும் தெளிவு இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மொழிவாரி இனங் களின் பிறப்புரிமை என்ற வகையில்தான் சுயாட்சித் தன்மையை வலியுறுத்தி வருகிறேன். இந்தக் குழுவில் இருப்பவர்கள் மொழிவாரி மாநில அமைப்பை எதிர்த்து அறிக்கை விட்டவர்கள். கண்டித்தும் அறிக்கை விட்டவர்கள். அவர்களுக்கு மொழிவாரி மாநிலங்களின் சுயாட்சிக் கொள்கையிலே எப்படி நம்பிக்கை இருக்க முடியும் ? தனிப்பட்ட முறையிலே அவர்களிடம் எனக்கு மதிப்பு உண்டு. அவர்களை நான் மதிக்கக் கூடியவன். சென்னை நகரில் ஆகஸ்டு 20-க்குப் பின்னும் தொடர்ந்து போராட்டம் நடைபெறுமென்று இன்று காலையில் வந்த செய்தி சரியல்ல. ஒருநாள் அடையாள நிகழ்ச்சியாகத்தான் போராட்டத்தை நடத்துகிறேன். தொடர்ந்து நடத்துவதை முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து. பொறுப்பை அவரிடம் தந்து, நிறுத்திக்கொள்கிறேன் என்பதை முதல்வர் அவர்களுக்கு மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு திரு.மு. கருணாநிதி : தலைவர் அவர்களே! அமைக்கப்பட்ட குழுவைப்பற்றி நம்முடைய தமிழரசுக் கழகத் தலைவர் சில எண்ணங்களை வெளியிட்டார்கள். நம்முடைய மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைப் பெறுவதற்காக