பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 59 கல்வித்துறை மாநிலங்களுக்கே உரியது என்று சொல்லப் பட்டாலும் பல்கலைக்கழக மானியக் குழு என்று ஒன்று இருக்கிறது. கொஞ்சம் பணத்தைக் காட்டி. மாநிலங்களிடத்திலிருந்து கல்வி நிலையங்களிலும் அது தலையிடலாம். தொழில் அமைச்சர் மாண்புமிகு மாதவன் அவர்கள் தினத்தந்தி'யிலே கல்வித்துறையைப் பற்றி-சில திங்கள் அந்தத் துறையை நிர்வகித்த அனுபவத்தைப்பற்றி - எழுதினார்கள். எப்படி எல்லாம் சுற்றி வளைத்து. இராஜ்யத்தில் கல்வித் துறையிலே பல்கலைக் கழக மானியக் குழு தலையிட முயல்கிறது என்பதை எடுத்துச் சொன்னபோது. மிகுந்த வேதனையோடு" என்ற வார்த்தையை நிறையக் கையாண்டிருந்தார்கள். சொற்ப நாட்களே அந்தத் துறையிலே அனுபவம் பெற்ற அவர்கள், எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள்! இந்த இலட்சணத்தில் கல்வித்துறை மாநிலத்திற்கே உரியது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இங்கு இந்தி போதனை வேண்டாமென்று நாம் முடிவு செய்திருக்கிறோம். ஆனால், பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் இங்கு இந்தியைக் கொண்டு வருகிறது மத்திய அரசு. ஏன், இந்தி பல்கலைக் கழகத்தைக் கூடத் துவக்க முன் வருகிறது. ஆக. ஜனநாயகத்தைப் பறிக்கக் கூடிய அளவுக்கு பல்கலைக் கழக நிதிக் குழுவும் திட்டக் கமிஷனும் செயல்படுவதைப் பார்க்கிறோம். மொத்தத்தில் நடைமுறையில் அரசியல் சட்டம் கொடுக்கிற சொற்ப அதிகாரங்களைக்கூட மாநிலங்கள் அனுபவிக்க முடியாமல் பல்கலைக் கழக மானியக் குழுவும் திட்டக் கமிஷனும் இயங்குகின்றன. இன்னொரு கட்டுப்பாடு அரசியல் சட்டம் கொடுக்கும் அதிகாரத்தைத் தணிக்கை செய்கிறது. அது கட்சிக் கட்டுப்பாடு. இந்த மாநிலத்திலேயே பார்க்கும்போது, மத்தியிலுள்ள ஆளுங்