பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் @ 65 வரவில்லை ஏதோ ஒரு ஐயப்பாட்டின் அடிப்படையில் இப்படிப்பட்ட ஒரு மரபு இருக்கிறதே தவிர, அரசியல் சட்டம் அப்படி வற்புறுத்தவே இல்லை. வலிமை வாய்ந்த மத்திய சர்க்கார் வேண்டும் என்று சொல்கிற தேச பக்தர்களோடு நான் இரண்டறக் கலந்து கொள்கிறேன். இந்திய ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்பவர்களோடு உணர்ச்சி பூர்வமாக நான் ஒன்றுபடுகிறேன். ஆனால், வலிமை உள்ள சர்க்கார் வேண்டும் என்பதற்காக, சுகாதாரத்தையும் கல்வியையும் ஏன் மத்தியிலும் வைத்துக் கொள்ள வேண்டும்? யாருக்கு எதிராக மத்தியில் வலிமை வாய்ந்த சர்க்கார்? மாநிலத்திற்கு எதிராக மத்தியில் வலிமைவாய்ந்த சர்க்கார் இருக்கவேண்டும் என்று சொல்வது மக்களுடைய தேசபக்தியையே சந்தேகிப்பது ஆகும். மத்திய சர்க்கார் மாநில சர்க்கார் மீது சந்தேகத்தை 20 ஆண்டுகளாக வளர்த்து வந்ததன் விளைவுதான் ஜனாதிபதி தேர்தலின் முடிவு. அந்த முடிவு நம்மிடையே நல்ல மாறுதல் ஏற்படுத்தவேண்டும். வெற்றி வெறியோடு நான் சொல்லவில்லை. விரோத உணர்ச்சியோடு நான் சொல்லவில்லை. நேற்றிரவு 10.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட முடிவு வோட்டுகள் எப்படிப் பிரிந்துள்ளன; மாகாணங்கள் எப்படி காங்கிரசின் கையை விட்டுப்போய்க் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது. வெற்றி, நான் விரும்புகிற பக்கம் இருந்தாலும் கூட, எனக்குக் கவலை இருக்கிறது. அது பகைமையில் போகக்கூடாது. உறவில் முடியவேண்டும். அந்த உறவை வளர்க்க அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் இதைத் தவிர. வேறுவழி ஒன்றும் தெரிய வில்லை. இது ஒருமைப்பாட்டு முயற்சிக்குக் கேடானது என்றால் அதை எனக்கு எடுத்துச் சொல்லலாம். இதில் என்ன கேடு வந்துவிடும் ? சுகாதாரத்தை, கல்வியை மாநிலங்களுக்கே மாநில-5.