பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 ம.பொ.சிவஞானம் விடுவதனால் இந்தியாவில் பலம் வாய்ந்த சர்க்கார் மத்தியில் இருக்காதா? நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் ஒன்றை திரு. ஹனுமந்தய்யா தலைமையில் மத்திய சர்க்கார் நியமித்தது. அந்தக் கமிஷனும் சிபார்சு செய்திருக்கிறது. 'அதிகாரப் பங்கீட்டு முறைகள் மாறவேண்டும்' என்று. நிதி வசதி கூடுதலாகக் கிடைக்கும் அளவுக்கு மாநிலங்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும். திட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களுக்கு சுதந்திரம் தரவேண்டும்! மாநிலக் கவுன்சில் ஒன்று வேண்டும் என்றெல்லாம் நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. காங்கிரசின் கையிலுள்ள மத்திய அரசு நியமித்த நிர்வாகச் சீர்திருத்தக் கமிஷனே இப்படிச் சிபாரிசு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள்கூட மறுக்க மாட்டார்கள். எதிர்கட்சித் தலைவர். அவர்களுக்கு ஒருவேளை என்னைப் பிடிக்கவில்லை என்றால். நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் செய்துள்ள சிபாரிசுகளின் பேரிலாவது இந்தத் தீர்மானத்தை அவர் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தீர்மானத்தின் மீது நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை. விவாதத்தின் முடிவில் ஏதேனும் சொல்ல வேண்டுமானால் சொல்கிறேன். 2 (திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் 21-8-70 அன்று முன்மொழிந்த மாநில சுயாட்சிக் கோரிக்கைபற்றிய தனிநபர் தீர்மானம் 3.9.70 அன்று திரும்பவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக அரசின் நிலைமையை விளக்கிப் பேசியது)