பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 67 மாநில சுயாட்சிபற்றி இத்தீர்மானத்தின் மீது பேசும்போது நான் தமிழரசுக் கழகத்தலைவர் அவர்களைப் பொதுவாக இந்தத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். வலியுறுத்த வேண்டாம் என்பதற்குக் காரணம் அந்தத் தீர்மானத்தில் பொருந்தியிருக்கிற கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதல்ல என்பதால் அல்ல. அந்தக் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். மாநில சுயாட்சி என்று அவர் குறிப்பிட்டிருப்பதும், மத்தியில் மேலும் மேலும் அதிகாரங்கள் குவிவதைத் தடுக்க வேண்டுமென்று அவர்கள் கோடிட்டுக் காட்டியிருப்பதும். அதிகாரங்கள் பரவலாக ஆக்கப்படவேண்டும் என்றும் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருப்பதும், திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களாகும். கழகத்தின் சார்பில் நடைபெறுகின்ற இந்த ஆட்சி அதை வலியுறுத்தி வருகின்ற காரணத்தாலே எந்தெந்த திட்டவட்டமான அதிகாரங்களை நாம் பெறமுடியும்- அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புக் கூறுகள் என்ன இருக்கின்றன. எந்தெந்த அதிகாரங் களைப் பெறுவதற்கு இன்றுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்வதற்காக அரசின் சார்பில் 3 மேதைகள் கொண்ட ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் அறிக்கை வந்த பிறகு எந்த அடிப்படையில் ஆராய்ந்து அரசாங்கத்தின் சார்பிலே ஒரு தீர்மானத்தை - மாநில சுயாட்சி பெறவேண்டும் என்கிற தீர்மானத்தை தாக்கல் செய்ய இருக்கிறோம். என்னென்ன அதிகாரத்தை நாம் பெறவேண்டும் என்ற அளவிலே அந்தத்