பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 ம.பொ.சிவஞானம் தீர்மானத்தைத் தயாரித்து இந்த மன்றத்திலே தரப்போகின்றோம். அந்தத் தீர்மானத்திற்கு அவர் வடிவம் கொடுக்க வேண்டுமென்ற அளவிலே இன்றைக்கு இந்தத் தீர்மானத்தைத் தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் அவர்கள் வலியுறுத்த வேண்டாம். ம.பொ.சி.பதில் 3 முதல்வர் பேசியதையடுத்து தமது தீர்மானம் பற்றிய விவாதத்தை முடித்து வைத்து ம.பொ.சி. பேசியது வருமாறு: பேரவைத் தலைவரவர்களே! நான் முன்மொழிந்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை பலர் ஆதரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மாநிலங்களுக்கு ஓரளவிற்கு மேலான அதிகாரங்கள் தேவைதான் என்று சொல்லிக் கொண்டு தீர்மானத்தை எதிர்க்கும் பாணியில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர். "தீர்மானம் முழுமை பெறவில்லை. என்னென்ன கேட்கிறீர்கள்?" என்று கூறினார்கள். அது நான் காட்டிய கண்ணியம் என்று சொல்லுகின்றேன். இந்தப் பேரவையைக் கட்டுப்படுத்தி விடக்கூடிய நிலையில் தீர் மானத்தை நான் அமைக்கவில்லை. சுயாட்சி அடிப்படையில் கூடுதலாக என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதனை எதிர்க்கட்சித் தலைவர்களே கூட. திருத்தத் தீர்மானமாகக் கொடுத்திருக்கலாம். பாதுகாப்பு. போக்குவரத்து. அயல்நாட்டுறவு ஆகிய மூன்று அதிகாரங்களைத் தவிர மற்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்குத்