பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 ம.பொ.சிவஞானம் விடுதலைப் போராட்டத்தின்போது நாங்கள்கூட. 'சுயாட்சி'- 'சமஷ்டி' என்றெல்லாம் சொன்னோம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சென்னார். விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களுக்கு மாநிலங்களுக்கு. "மாநிலங்களில் சுயாட்சியும் மத்தியில் சமஷ்டியும் அமையும்" என்று காங்கிரஸ் உறுதி மொழி கொடுத்து. விடுதலைக்குப் பின் மக்களை மாநிலங்களை ஏமாற்றிவிட்டது என்பதனை எதிர்க்கட்சித் தலைவரே ஒப்புக் கொள்ளுகிறார். இந்தப் போக்கு நியாயம் என்று எதிர்க்கட்சித் தலைவரவர்கள் கூறுவார்களா? விடுதலைப் போராட்ட காலத்தில் மட்டுமல்லாமல். விடுதலைக்குப் பின்னரும்கூட மாநில சுயாட்சி காங்கிரஸ் கட்சியால் வற்புறுத்தப்பட்டு வந்துள்ளது. சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட காலத்தில் அரிபுரா விலும், திரிபுராவிலும் காங்கிரஸ் மகாசபை நடந்தது. அந்த இரண்டு காங்கிரசிலும் மாநில சுயாட்சிக்கு உறுதி கூறும் தீர்மானம் நிறைவேற்றி வைக்கப்பட்டது. அயல் நாட்டுறவு, போக்குவரத்து. பாதுகாப்பு நீங்கலாக, மற்றவையெல்லாம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பிரிந்து வாழும் உரிமையுடன்- என்று தீர்மானம் போடப்பட்டது. இது 1938லும் 1939லும் நிகழ்ந்ததாக நினைக்கிறேன். 1942ல் காஷ்மீருக்குச் சென்ற மனித குல மாணிக்கம் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள். அங்குள்ள மக்களுக்கு உறுதிமொழி கூறும் வகையில், 'நான் விரும்புவது பெடரேஷன் கூட அல்ல; கான்பெடரேஷன்' என்று சொன்னார். அதை நம்பித்தான்- விடுதலைக்குப்பின் - காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. பிறகு நடந்ததென்ன? சுதந்திரம் நெருங்கி வந்த நேரத்தில் அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல்நாள் கூட்டத்தில் பேசுகையில் நேருஜி என்ன சொன்னார்? நாம் அமைக்கப் போவது, பெடரேஷன்' என்று