பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 71 சொன்னார். ஆம்;கான்பெடரேஷனிலிருந்து கொஞ்சம் இறங்கி. 'பெடரேஷன்' என்று சொன்னார். அரசியல் நிர்ணய மன்றம் அமைவதற்கு முன்பு பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு இந்தியாவுக்கு வந்தது. அது. அயல்நாட்டுறவு - போக்குவரத்து பாதுகாப்பு ஆகிய மூன்றையும் மத்திய அரசு வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிச்ச அதிகாரங்கள் உள்பட-மாநில அரசுகளுக்குத் தரப்படவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அதனை முணு முணுப்பின்றி ஏற்றுக் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி அரசியல் நிர்ணய மன்றத்திற்குள் சென்றது. பின்னர். திடீரென்று ராஜதந்திர விளையாட்டு நடந்தது. அதனால் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் 1947 ஆகஸ்டு 15ல் எஞ்சிய இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர். பிரிட்டிஷ் அமைச்சரவைத் திட்டத்தைக் கைவிட்டது காங்கிரஸ், நாடு துண்டாடப் பட்டதைக் காட்டிப் பயமுறுத்தி. இன்று நடை முறையிலுள்ள யூனியன் அரசியல் அமைப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் முதலில் 'கான்பெடரேஷன்' என்றார்கள். பின்னர் அதைக் கைவிட்டு, பெடரேஷன் என்றார்கள் பிறகு அதையும் கைவிட்டு 'யூனியன்' அமைத்தார்கள். 1941ல் யு.என்.ஓ. வில் "காஷ்மீரம் இந்தியாவிலிருந்து பிரித் தெடுக்க முடியாதபடி அதன் ஒரு அங்கம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் இந்தியாவிலுள்ள வேறு மாநிலங்களுக்கு இல்லாதபடி காஷ்மீருக்கு மட்டும் தனியாக அரசியல் நிர்ணய மன்றம் அனைத்துக் கொடுத்ததேன்? அதற்குத் தனிக் கொடி கொடுத்தது எதற்காக? மற்ற மாநில