பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 ம.பொ.சிவஞானம் அமைச்சரவைத் தலைவர்கள் 'முதல்வர்' என்று அழைக்கப்படும் போது, காஷ்மீர் முதல்வர் மட்டும் 'பிரதமர்' என்று அழைக்கப்படுகிறாரே, ஏன்?" என்று பாகிஸ்தான் பிரதிநிதி வினாவியபோது, அப்போது ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த சர். பி.என்.ராவ் என்ன சொன்னார்? ஆளுங் கட்சியாக இருந்த காங்கிரஸ் அரிபுரா-திரிபுரா மகா சபைகளின் தீர்மானத்தைப் படித்துக் காட்டி. "காங்கிரஸ் கட்சியின் கொள்கை அனைத்து மாநிலங்களுக்குமே பிரிந்து வாழும் உரிமையுடன் சுயாட்சியளிப்பதுதான். முதலில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாளடைவில் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படும்." என்று பதில் கூறியிருக்கிறார். ஜவகர்லால் நேரு அவர்கள், தற்போதுள்ள திட்டக் கமிஷனைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'அது ஒரு 'பேரலல் கவர்மெண்ட்' (போட்டி அரசாங்கம்) ஆகிவிட்டது" என்று சொல்லியிருக்கிறார். அதன்படி நமது மாநிலம் இரண்டு மத்திய அரசின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள நிலைமை இருக்கின்றது. மாநிலம் ஒவ்வொன்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மத்தியமல்ல; இரண்டு மத்தியம்! எதிர்க்கட்சித் தலைவரவர்கள், 'மாநிலங்களுக்குச் சுயாட்சி கொடுப்பது. பின்னால் அவை பிரிந்து போவதற்குத்தான் இடந்தரும்' என்று சொன்னார். யாரானாலும் சரி; என்ன சொல்கிறோம் என்பதைத் தெரிந்து சொல்ல வேண்டும். மைசூருக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே நதி நீர்த்தகராறு இருக்குமானால், அது மாநிலங்கள் சுயாட்சி பெறுவதனால் எப்படித் தீர்க்கப்படாமற் போகும்? மத்தியில் ஒரு ஆட்சி