பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 75 நம் நாட்டின அரசியல் சட்டத்தை வரைந்த அறிஞர்கள் எப்படியெல்லாம் அதனை வரைந்தனர் என்பது பற்றிக் கூறியுள்ளனர். அதனை அரசியல் நிர்ணய மன்ற நடவடிக்கைப் புத்தகத்தில் காணலாம். அமெரிக்க அரசியல் சட்டம். பிரிட்டிஷ் அரசியல் சம்பிரதாயம், ஸ்விட்சர்லந்து அரசியல் சட்டம் ஆகியவற்றையெல்லாம் அராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது. அவர்கள் எடுத்துக் கொள்ளத் தவறிய நல்லவை இன்னு முண்டு; அவற்றையும் நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுவேன். அமெரிக்கா, ஒரு 'கான்பெடரேஷன்' பெடரேஷன் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! யு.எஸ்.ஏ (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா) என்ற அதன் பெயரே. அது ஒரு பெடரேஷன் என்பதனைக் காட்டுகிறது. ருஷ்யா. (யு.எஸ்.எஸ்.ஆர்.) (யூனியன் ஆப் சோவியத் சோசலிசக் குடியரசுகள்) என்ற தனது பெயராலேயே தான் ஒரு பெடரேஷன் என்பதனைக் காட்டுகிறது. 'இந்தியா' ஒரு சமஷ்டி நாடு என்பதை அதன் அரசியலைத் தயாரித்தவர்கள் காட்டத் தவறி விட்டார்கள். எனது தீர்மானத்தில் 'தமிழக சுயாட்சி' என்றெல்லாம். 'மாநில சுயாட்சி' என்றுதான் சொல்லியிருக்கிறேன். தமிழரசுக் கழகமும் தி.மு.கவும் மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். ஆனால் இந்தக் கழகங்கள் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால். அகில இந்திய நோக்குடன் இந்தப் பிரச்னையை அணுகி, அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி கோருகின்றன. மாநில நோக்குடன் தமிழகத்திற்கு மட்டும் சுயாட்சி கோரவில்லை. ஆனால். அப்படித்தான் கோருகிறோம் என்ற ஒரு தவறான எண்ணத்தைக் கற்பிக்க நினைக்கிறார்கள்.