பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 7 பிறகு, 1969 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று சுயாட்சிப் போராட்டம் நடத்த நிச்சயித்திருந்தபோது - அதற்கு முன்னாளில் அதாவது. ஆகஸ்டு 19-ஆம் தேதியில் முதல்வரவர்கள். போராட்டத்தைக் கைவிடுமாறு என்னைக் கேட்டுக் கொண்டு சட்டப் பேரவையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். அதில், "டாக்டர் இராசமன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் போகிறோம். அந்தக் குழு தன்னுடைய அறிக்கையைத் தருகிற வரை போராட்டம் தேவையில்லை; குழு அறிக்கை தந்தபின், அந்த அறிக்கையை சட்ட அவைகளில் வைத்து, அவற்றின் ஆதரவு பெற்ற பிறகு சேர்ந்தே போராடலாம்" என்று குறிப்பிட்டார்கள். அதன் காரணமாக, அந்தப் போராட்டம் ஒரு நாளோடு நிறுத்தி வைக்கப்பட்டது. இவை முதல்வரவர் களுக்கும் இந்த அவையினருக்கும் நினைவிருக்கும். இந்த அவையின் முன்னே டாக்டர் ராசமன்னார் குழுவின் அறிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை ஒன்றை மட்டுமே வைத்து, அதை ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டிருப் பார்களேயானால், எனது நிலைமை. நான் எடுக்க வேண்டிய முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். அப்படிக்கின்றி, அந்த அறிக்கையை அரசு பரிசீலனை செய்து. அதன் மீது ஆய்வு நடத்தி, அதிலே முற்போக்கான மாறுதல்கள் செய்து, வெள்ளை அறிக்கை ஒன்றையும் அவைமுன் கொண்டு வந்திருப்பதால் ஓரளவு மன நிறைவு பெறத்தக்க நிலையை நான் அடைந் திருக்கிறேன். அதுமட்டுமல்ல: வெள்ளை அறிக்கையை விடவும் இன்னொருபடி மேலே போய், ஒரு தீர்மானத்தையும் இந்த அவையில் பிரரேபித்திருக்கிறார்கள். "மாநில சுயாட்சி பற்றியும், இராசமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும், தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று