பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 79 என்றார். எந்த நம்பிக்கையில் அவர் அவ்விதம் கூறினார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் உறுதியாகச் சொல்லுகிறேன். 1972க்குள் மாநில சுயாட்சிக்கு உத்தரவாதம் தரப்பட வில்லையானால், 72க்குப் பிறகு இந்தியா அமைதியாக இருக்கும் என்று யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. முன்பொரு சமயம் 'அஸாம் அஸாமியருக்கே' என்ற குரல் எழுந்தது. 'அதுபற்றி உங்கள் கருத்தென்ன? என்று காந்தியடி களிடம் கேட்டபோது, அவர் கூறினார். அசாம் அசாமியருக்குத்தான். அதை மறுக்க முடியாது. ஆனால் அதற்கொரு நிபந்தனையுண்டு' என்றார். அதாவது. "இந்திய நாட்டின் ஐக்கியத்தை அசாமியர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். "இந்தியாவுக்கு எத்தகைய சுதந்திரத்தை நான் விரும்பு கிறேனோ, அதே சுதந்திரத்தை அசாமியர்களுக்கு மட்டுமல்ல; எல்லா மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்." "அதிகாரம் கோயில் கோபுரம் போல அடிப்புறம் அகன்றும் நுனிப்புறம் குறுகியும் அமைய வேண்டும்" என்று அடிகள் கூறியுள்ளார். திரும்பவும் சொல்லுகின்றேன்; அரிபுரா, திரிபுரா காங்கிரஸ் மகாசபைகளின் தீர்மானத்திலும், அரசியல் நிர்ணய சபையின் முதல் நாள் கூட்டத்தில் பண்டித நேரு நிகழ்த்திய சொற்பொழிவிலும், காங்கிரஸ் மகாசபையால் ஏற்றுக் கொள்ளபட்ட பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டத்திலும் டீசென்ட்ரலைஸேஷன் (அதிகாரப் பரவல்) என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திரு. கே.அனுமந்தையா அவர்கள் தலைமையில் இயங்கிய நிர்வாகச் சீர்த்திருத்தக் கமிஷன் சிபாரிசிலும் மத்தியில அதிகாரங்கள் குவிந்துகொண்டே போகிறதென்றும். அது