பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 R ம.பொ.சிவஞானம் நாட்டுக்கு நன்மை தராதென்றும் கூறப்பட்டுள்ளது என்பதனை எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு நினைப்பூட்டுகின்றேன். இறுதியாக ஒன்றைச் சொல்லி எனது பேச்சை முடிக்க விரும்புகிறேன். மொழிவழியே தமிழ் மாநிலம் வேண்டுமென்று நான் கோரியதுபோது, அது 'காட்டுமிராண்டிகள் கொள்கை" என்றார் ஒரு பெரியவர். அதை அப்போது நான் சகித்துக் கொண்டேன். வடக்கெல்லைப் பகுதிகளை - தெற்கெல்லைப் பகுதிகளை தமிழகத்துடன் சேர்க்கக் கோரியபோதும், அது 'சின்னப் புத்தி' என்றார்கள். அதையும் சகித்துக் கொண்டேன். இன்று நாம் காண்பதென்ன? மொழி வழி தமிழ் மாநிலம் அமைந்துவிட்டது. வடக்கெல்லைப் பகுதிகளும் தெற்கெல்லைப் பகுதிகளும் ஓரளவு கிடைத்திருக்கின்றன. 'தமிழ்நாடு என்று பெயர் வைக்க நான் கோரியபோது, அது சோறு போடுமா?' என்று கேலி பேசினார்கள். அதோடு நில்லாமல். தமிழரசுக் கழகத் தோழர்களில் 1700 பேர்களை நடிகர் உள்பட-சிறையில் அடைத்தார்கள். ஆனால், 'தமிழ் நாடு பெயர் தீர்மானம் இந்தப் பேரவையில் வந்தபோது. எதிர்க் கட்சியாகி விட்ட காங்கிரசும் ஆதரித்து வோட்டு போட்டதைக் கண்டோம். காங்கிரஸ்காரர்கள் 'தமிழ்நாடு வாழ்க' என்று கோஷித்ததையும் கேட்டோம். அன்று நாங்கள் (தமிழரசுக் கழகத்தார்) முதலில் சொன்னபோது அதனை எதிர்த்தவர்கள், பின்னர் ஆதரித்தார்கள். அதுபோல, இதையும் (மாநில சுயாட்சியையும்) காங்கிரஸ் காரர்கள் ஆதரிக்கும் காலம் வரும் என்று நம்பி. முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது தீர்மானத்தை சிறயாக்கில் விடுகிறேன்.