பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 9 I டிருந்த கனகம்மாள், அவள் பார்வை இளைய மகனிடம் போனதைப் பார்த்ததும். அடுப்பு இதற்குமேல் தாங்காது என்று நினைத்தவளாய் சமையலறைக்குள் போய்விட்டாள். கணவனுக்கு ஒரு தடவை உத்தியோகத்தில் சீனியாரிட்டி கொடுக்காததுபோல், தன் சீனியாரிட்டியும் பயனளிக்காமல் போனதில் அவளுக்கு வருத்தந்தான். லுங்கிக்காரன் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த போது, டென்னிஸ் நல்லா விளையாடுவீங்களாமே... டென்னிஸ் எப்ப வேணுமின்னாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் எக்னாமிக்ஸை இப்ப மட்டுந்தான் கத்துக்க முடியும்." என்று மோகினி சொன்னாள். லுங்கிக்காரன் இன்னொரு அறைக்குள் போக முயற்சித்தபோது. விளை யாட்டைப் படிப்பாய் நினைக்கிறதுல தப்பில்ல. ஆனால் படிப்பைத்தான் விளையாட்டா நினைக்கக்கூடாது. நான் சொல்றது ஒங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன்’ என்று அவள் மேலும் சிரித்துக்கொண்டு மேலும் மேலும் பேசிய போது, சபாபதி அண்ணனை மேலுங்கீழும் பார்த்துக் கொண்டே கண்களால் அவனைப் பிறாண்டினான். அண்ணன்காரனோ மிகப்பெரிய லட்சியத்தை எட்டிப் பிடித்து விட்டவன்போல் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே உலா வந்துகொண் டிருந்தான். மோகினி சமையலறைக்குள் நுழைந்தாள். பால் பாத்திரத்தை இறக்கப்போன கனகம்மாவை, கொஞ்சம் வன்முறையாகத் தள்ளிவிட்டு இவள் இறக்கி வைத்தாள்க நீங்களும் இருக்கியளடி. இங்க வந்து பாருங்க!' என்று கூச்சல் போட்டு, இரண்டு மகள்களின் கூட்டத்தைச் சேர்க்கப் போன அவளை, உஷ்' என்று வாயில் விரலை வைத்து அடக்கிவிட்டு, இப்ப இருமல் எப்படி அத்தே இருக்கு? நீங்க தினமும் சுக்கைத் தட்டிக் காப்பி போட்டு சாப் பிடணும். ஒரு மாதத்துல இருமல் போயிடும்' என்று.