பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 99 முடியாது. என்று சொல்லிவிட்டு, அவன் பரட்டைத் தலையில் தன் கையைப் பதித்துவிட்டு, பிறகு டாடா' காட்டினாள். சீனிவாசன் மகிழ்ந்துபோனான். அவள் காட்டிய தாய்மையில் இவன் கிறங்கிப் போனது போல், காரும் பின்னால் வந்த சைக்கிள்கள் கூட ஓவர்டேக்" செய்யுமளவிற்கு, மெது மெதுவாய் ஓடியது. காரை ஷெட்டில் விட்டு விட்டு, அவன் பெருமையோடு வீட்டுக்குள் நுழையப்போனான். அடிக்கடி தன்னை திறமை யில்லாதவன், அசடு என்று எவரும் கேட்குமுன்னாலேயே அபிப்பிராயங்களை அள்ளித் தெளிக்கும் அப்பாக்காரர் இவன் செலக்ஷனை’ப் பார்த்துப் பாராட்டப்போவதை நினைத்துக்கொண்டு அவன் உள்ளே நுழைந்தபோது முன் அறையில், அவன் தந்தை அருணாசலம் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தவர், இப் போ து அவனுக்கும் கேட்கட்டும் என்று நினைத்தவர் போல் கத்தினார். இந்தக் கல்யாணம் நடக்க முடியாது. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அவள் என் மருமகளா ஆக முடியாது.” கனகம்மாள் முகம் வெளிறியிருந்தது. கமலா கடுகடுப் போடு உதடுகளைத் துடிக்க வைத்துக் கொண்டாள். உஷா மட்டும் தந்தையிடம் நேராகக் கேட்டாள். காரணம் சொல்லாமல் ஒருத்தியை வேண்டாமுன்னா எப்படி?’’ அவளைப் பாத்தா பிஞ்சில் பழுத்தவள் மாதிரி தோணுது. அதோட ஒவ்வொருவளுடைய வீக்னலையும் கண்டு பிடி ச்சி அதைத் தனக்கு சாதகமா பயன்படுத்துற டைப்! சீனன் நல்ல நாளுலயே மந்தம். இவள் கையில பிடிச்சி கொடுத்துட்டா. அவ்வளவுதான்."