பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சு. சமுத்திரம் கனகம்மாளுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. கணவன் காரர். தனது மனம் மாறிவிடுமோ என்று தனக்குள்ளேயே பயந்து, தான் மேற்கொண்ட நிலையிலிருந்து தப்பிக்க முடியாமல் இருக்க, தன்னைச் சுற்றியே உறுதிமொழிக் கோடுகளைப் போட்டுக் கொள்வதோடு, அந்தக் கோட்டை அழிக்கவிடவும் மாட்டார் என்பது தெரிந்திருந்தும் அவள் பேசினாள். - பாவம். அறியாத வயது: ஆசையோட பழகினாள். அவள் பேசுவது ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம் கண்டு பிடிக் கிறது அபத்தம். என் வயசில இந்தமாதிரி ஒரு பொண்ண பாத்ததுல்ல...' நானும் பாத்ததுல்ல. அதனாலதான் வேண்டாங் கறேன்!" எம். எஸ். ஸி. படிக்க நினைத்த கமலா இப்போது அப்பாவை இடைமறித்தாள்.

  • நீங்க சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா அப்பா? ஒரு பெண்ணைக் காரணம் காட்டாமலே வேண்டாங்கறது. அநியாயம். அக்ரமம்."

அருணாசலம் இப்போது பயங்கரமாக வெறித்தார். அவளைப் பற்றி ஆயிரம் விஷயங்கள் தெரியும். அதெல்லாம் ஒங்ககிட்ட சொல்ல முடியாது. சொல்றதும் பண்பில்ல. மொத்தத்துல நான் உயிரோட இருக்கற வரைக்கும் அவள் இந்த வீட்டுக்குள்ள வர முடியது: பெண்கள் புரிந்தும் புரியாதது போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றபோது, சீனிவாசன் நிலை குலைந்து போனவன்போல் வாசற் கதவைப் பிடித்துக் கொண்டான். பின்னர் நொண்டியடித்து அப்பாவை நெருங்கினான்.