பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 "சாதுவுக்குக் கோபம் வந்தால், காடு தாங்காது" என்பது உண்மையோ பொய்யோ, சீனிவாசனுக்கு வந்த கோபத்தால் அந்த வீடே தாங்க முடியாமல் கிட்டத்தட்ட காடு மாதிரி ஆகியது.

  • சும்மா கத்தாதிங்க அப்பா! நான் மூணு வருஷமா பழகி நல்லவள்னு கண்டுபிடிச்சவளை நீங்க மூனு நிமிஷத்துல, அதுவும் சரியாக்கூடப் பார்க்காம ஒரு முடிவுக்கு வாரிங்கன்னா அது அர்த்தமில்லாத முடிவுதான். இது என்னோட கல்யாணம்! நீங்க வச்சிருக்கிற மிஸ் கன்ஸிவ்டு நோஷன்களுக்கு நான் எக்ஸ்பரிமென்டாய் இருக்க முடியாது. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். வேணு முன்னா பாருங்க!”

அருணாசலம், அதிர்ந்துபோனார் பரம சாது என்று நினைத்த தன் மகனா இப்படி மாறிவிட்டான்? இருக்க இருக்காது. அந்த மாய மோகினி மாற்றியிருப்பாள். கல்யாணத்துக்கு முன்னாலேயே இப்படி மாறிவிட்டான் என்றால்... ஆன பிறகு கனகம்மாளுக்கு எதுவும் ஓடவில்லை. கைகளை நெறித் துக்கொண்டாள், கமலா எந்தப்பக்கம் சேரலாம் என்பது போல் யோசித்துக்கொண்டிருந்தாள். சபாபதி, அண்ணன் பேசுவதை ஆமோதிப்பவன்போல் அவனுக்கருகே நின்று கொண்டான். இப்டி பேசினாத்தான் அவன் கல்யாணத்துல அவன் போராடவேண்டிய அவசியமிருக்காது.