பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 宣●莎 நீ மட்டும் இந்த கல்யாணத்தால அழிஞ்சி போவதாய் இருந் தாக்கூட நான் அரை குறையா சம்மதிச்சிருப்பேன்! ஆனால் அவள் இங்க உள்ள வந்துட்டால் வீடு ஆமை புகுந்த வீடா யிடும். ஒன் தங்கச்சிங்க இங்கயே இருக்க வேண்டிய கட்டாயம் வந்துடும். அதான் வேண்டாங்றேன். ஒன்ன தொட்டிலிலே இருந்து எடுக்கறதுக்காகத் தலகுணிஞ்சேன். தோளுல தூக்கி விளையாடுறதுக்காக தலகுணிஞ்சேன். அப் போல்லாம் சந்தோஷமா தல குனிஞ்ச நான் இப்ப நீ என் தோளுக்குமேல வளர்ந்து உதவாக்கரையா போனதுக்காகத் தல குனியறேண்டா அவளோடதான் வாழனுமுன்னா... எங்களோட வாழ முடியாது! அப்புறம் உன் இஷ்டம்.” என்று சொல்லிவிட்டு, லேசாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டே உள்ளே போய்ப் படுத்துக்கொண்டார். கனகம்மாள் அவர் பின்னால் போய் கட்டிலுக்கருகே நின்றாள். அவர் காலை லேசாகத் தொட்டாள். அவர் கத்தாமல் இருந்ததால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கு முன்பு, அண்ணனுக்காக வக்காலத்து வாங்கிய தங்கைகளும் தம்பியும் அப்பா தங்கள் பொருட்டே அவன் திருமணத்தைத் தடுப்பதாகச் சொன்னதில் அர்த்தம் கண்டு பிடித்தவர்கள்போல், அவனைக் கண்களால் ஒதுக் கினார்கள். சீனிவாசனுக்கும் மன்னிப்பு மனோபாவம் கோபரூபமானது.

  • நீ மட்டும் அழிஞ்சிபோறதா இருந்தாக்கூட இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பேன்னு சொல்றாரே... அப்படின்னா என்ன அர்த்தம்? பெற்ற மகனை அதுவும் முதல்ல பெற்ற மகனைவிட மற்ற பிள்ளைங்கள பெரிசா நினைக்கிற ஒருவரை, அதுவும் அவங்களுக்காக மூத்தவனை விஷப் பரீட்சை செய்யுற ஒருவரை நாம ஏன் மதிக்கணும். மதிக்கவும் வே ண் ட ம். இந்த வீட்ல மிதிக்கவும் வேண்டாம் .