பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 04 சு. சமுத்திரம் சீனிவாசன் அம்மாவை மட்டும் ஒரு தடவை கனிவாகப் பார்த்துவிட்டு மெளனமாக வெளியேறினான். குடும்பத் தினர் வாசலைத் தாண்டி வந்து கூப்பிட்டாலும் கூப்பிட லாம் என்று நினைத்து முதலில் வேகமாக நடந்தான். பிறகு கூப்பிடட்டுமே என்று நினைத்தவனாய் ஒரு இடத்தில் நின்றான். யாரையும் காணோம். இறுதியில் திரும்பிப் பாராமல் நடந்தான். மோகினியின் வீட்டில் வந்து காலிங் பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்த மோகினி சந்தோஷம் தாங்க முடி யாமல் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். பாத் திங் களா... பேசுற முறையில பேசுனா எல்லாம் சரியாயிடும். ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல தன்மை இருக்கு. அதைத் தொடுற விதமாய் தொட்டால்' அது கொடுக்கிற விதமா கொடுக்கும். என்னங்க நீங்க! சந்தோஷத்துல பேச முடியவியா... இதுக்குத்தான் ஒங்கள சின்னப் பையன்னு சொல்றது!" மோகினி காண்பித்த உற்சாகத்தில், அவர் தந்தை ஏகாம்பரமும் அங்கே வந்தார். வந்தது மட்டுமில்லாமல் * வாங்க மாப்பிள்ளை... உள்ளே வாங்க" என்றார். மெளனமாக உள்ளே வந்த சீனிவாசனின் பேயறைந்த முகத்தைப் பார்த்து, இருவரும் திடுக்கிட்டார்கள் மாப் பிள்ள வந்துருக்காரே, என்ன விஷயமாம்..." என்று உள்ளே படுத்துக்கொண்டே, ஒலக் குரலிட்ட அம்மாவின் குரல் மோ கினிக்குக் கேட்கவில்லை. சீனிவாசன் பெரிய தியாகம் செய்துவிட்ட கம்பீரத்தில் நடந்தவற்றைக் கிட்டத்தட்ட நடித்தே காட்டிவிட்டான். வார்த்தைக்கு வார்த்தை மோகினியின் முகத்தைப் பார்த் துக்கொண்டான். மோகினியைப்பற்றித் தந்தை சொன் னதை ஒன்றுவிடாமல் ஒப்பித்தான். அந்த ஒப்பிப்பு முடிந்