பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சு. சமுத்திரம் பையன்’ மாதிரி பார்த்த சீனிவாசனைக் கனிவாகப் பார்த்துக்கொண்டே இந்த லோபா... கம்... பெட்ல தூங்குங்க. தலையணை கொண்டு வாரேன். மற்ற விஷ யத்தை நாளைக்குப் பாத்துக்கலாம்." என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு தலையணையையும், பெட்oட்டையும் எடுக்க தன் அறைக்குள் போனாள். ஒரு வாரம் ஓடியது. நல்ல நாளில் நல்ல நேரத்தில் சீனிவாசன் ஒரு கோவில் சந்நிதியில் மோகினிக்குத் தாலி கட்டினான். மோகினியின் இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் அவள் தூரத்து உறவினர் சிலரும் வந்திருந்தார்கள். விஷயத்தை மற்றவர் கள் மூலமாகக் கேள்விப்பட்ட சீனிவாசனின் தங்கை உஷாவும், தம்பி சபாபதியும் திருமணத்தில் நேரடியாகக் கலந்து கொண்டார்கள். கனகம்மாள் கோவிலுக்கு வருகிற சாக்கில் அருகே பிறருக்குத் தெரியாத இடத்தில் கண் கலங்க. நின்றாள். தாலி கட்டப்படும் வேளையில் மூலவரைக் கை. கூப்பித் தொழுது, மகனையும் மருமகளையும் கால்கை கதியாக வைக்கும்படி வேண்டிக்கொண்டு வெளியேறி விட்டாள். மோகினியின் வற்புறுத்தலின் பேரில் உஷாவும் சபாபதி யும் ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போனார்கள். பழைய காலத்து கட்டிடத்தில், உயரமான மேடையில் போடப்பட்டிருந்த உயரமான நாற்காலியில் ஓணான் மாதிரி உயரமாக இருந்த சப்-ரிஜிஸ்டிரார் திருமணத்தைப் பதிவு செய்தார். இன்னொரு வாரம் ஓடியது. மோகினி அலுவலகத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தாள். கணவனால் கிடைத்த இன்பநுகர்ச்சியை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்கிற தாய்மை உணர்வே அவளை அதிகமாக ஆட்கொண் டிருந்தது. அதேசமயம், கணவன் கூறும் ஸ்வீட் நத்திங்கை