பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 107 நினைக்கும்போதெல்லாம், அவனைப் பெற்று அவளை உதாசினப்படுத்தி, ஆமையுடன் ஒப்பிட்ட அருணாசலத்தின் மீது தாங்கமுடியாத ஒருவித வெறுப்பு, கிட்டத்தட்ட ஒரு ஃபோபியாவாகவே அவளுக்கு மாறியிருந்தது. இப்படி, இன்ப சல்லாபங்களைத் தாய்மையின் எதிர்காலமாகவும் வெறுப்பின் கடந்த காலமாகவும் ஒரே சமயத்தில் நினைத் துக்கொண்டிருந்த மோகினி, அதே நினைவுகள் சுமையாக வும், சுமைதாங்கியாகவும் தோன்ற, கண்ணாடியில் முகத் தைப் பார்த்து குங்குமத்தைச் சரி செய்துகொண்டிருந்த போது குங்குமக்காரனான சீனிவாசன், லுங்கி பனியனுடன் மொட்டையாக' உட்கார்ந்திருந்தான். மகளிடம் வெற்றிலை பாக்குக்குக் காசு வாங்குவதற்காக உள்ளே எட்டிப் பார்த்த ஏகாம்பரம் என்ன மாப்பிள்ளை.... நீங்க வேலைக்குப் போகலியா' என்று கேட்டார். அவன், அதற்குப் பதில் கூறுவதற்கு முன்னதாக மோகினி, அப் போதுதான் நினைவுவந்தவள் போல், ஆமாம்...இன்னும் ஒங்களுக்கு லீவு முடியலியா?" என்றாள். சீனிவாசன் கம்பீரமாகப் பதில் சொன்னான். "வீவு போட வேண்டிய அவசியமில்லை. வேலைய ராஜினாமா பண்ணிட்டேன்!" மோகினி சரி செய்ய நினைத்த குங்குமத்தைச் சரிப் படுத்தாமலே அவனை நிமிர்ந்து பார்த்து ஒங்களுக்கு எப்ப விளையாடணுமுன்னு தெரியாது. எப்பவுமே விளையாட்டுத் தான் பையன் மாதிரி' என்றாள். சீனிவாசன் கம்பீரத்திற்கு கம்பீரம் சேர்த்துப் பேசினான்.

  • அது என் அப்பாவின் சிபாரிசில் கிடச்ச வேலை, அவரே எனக்கு இல்லன்னு ஆகும்போது அவரு கொடுத்த பிச்சக். கார வேல எதுக்கு?"

ஏகாம்பரம் இடைமறித்தார்.