பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சு. சமுத்திரம் அதுக்காகப் பிச்சக்காரனா மாறுவதுன்னு தீர்மானிச் சிட்டிங்களாக்கும்..." சீனிவாசன் பதில் பேசத் தெரியாமல் திணறியபோது, மோகினி அவனைக் கூர்ந்து பார்த்தாள். பிறகு அப்பா வாலதானே டிகிரி வாங்கினிங்க? அந்த சர்டிபிக்கட்டை கிழிச்சிட்டிங்களா... வச்சிருக்கிங்களா?' என்று அமைதியாகக் கேட்டாள். இனுமே அந்த சர்டிபிக்கட்டை கிழிச்சா என்ன, கிழிக் காட்டா என்ன... இவரு கெட்ட கேட்டுக்கு எந்தப் பய வேல கொடுப்பான்?’ என்றார் ஏகாம்பரம். சீனிவாசனுக்கு, மனைவி கோபத்தோடு கேட்டாளா, தனது தியாகத்தை மெச்சும் வகையில் கேட்டாளா என்பது புரியவில்லை. கிண்டலாகப் பேசிய ஏகாம்பரத்தை அவள் அடக்காததிலிருந்து, அவள் கோபமாகத்தான் கேட்டிருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான். மோகினியின் உதடுகள் துடித்தன. விழிகள் வெம்மை யாக மாறி, பின்பு செம்மையாயின. ஆயிரம் ரூபாய் சம்பளத்தை இவர் அலட்சியமாக விட்டுவிட்டு, லட்சியம் இல்லாமல் பதில் சொன்னா என்னர்த்தம்? நாளைக்குக் குழந்தை பிறக்கும். நாளை இருக்கட்டும்... இன்றைக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கணும். பொங்கல் வரப்போவுது. துணிமணி எடுக்கணும்... கேஷவல் லேபராக தினமும் கிடைக்கிற எட்டு ரூபாய்ல என்னத்த பண்றது... இவருகிட்ட பக்குவமா பேசி வேலையை விட்டுட்டு மானேஜர் சுந்தரத் தோட கழுகுக் கண்களைப் பார்க்காம இவர மட்டுமே பாத்துகிட்டு இருக்கணுமுன்னு நினைத்தால்... இவரு... இவரு... அட கடவுளே... ஏகாம்பரத்தால் கோபத்தை நெஞ்சிற்குள் வைக்க முடியவில்லை. ஒருநாளைக்கு எப்படியும் ஒரு கட்டு வெற்றிலையைக் குதப்பும் அவர் வாய். அது இல்லாமல் போய்விடுமோ என்கிற ஆதங்கத்தில் கத்தினார்.