பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 0. சு. சமுத்திரம் என் சொத்தை ஒங்ககிட்ட ஒப்படைக்காம இருக்கிறது நியாயமில்ல. இன்னைக்கே மிஸ்டர் அருணாசலத்திற்கு வக்கீல் நோட்டீஸ் விடுறேன்" என்று சொல்லிக்கொண்டே வெறும் பணியனைத் துழாவிவிட்டு பின்னர் மனைவியை அர்த்தத்தோடு பார்த்தான். மோகினி டிரங்க் பெட்டியைத் திறந்து சேமித்து வைத் திருந்த ஐந்து பத்துரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டு ஆகவேண்டியதைப் பாருங்க, பேச்ச குறச்சிட்டு காரியத்துல இறங்குங்க.." என்றாள். சீனிவாசன் அவசர அவசரமாக உடையணிந்துகொண்டு அவள் புறப்படும்போது புறப்படப் போகிறவன்போல் நின்றான். இதைப் புரிந்துகொண்ட மோகினி, நீங்க போங்க... நான் எக்கேடும் கெட்டுப்போகிறேன்." என்று கத்தினாள். சீனிவாசன் போய்விட்டான். அப்பாவுக்கும், பிள்ளைக்கும் இடையே கோடு கிழிப்பது போல் கோர்ட்டைக் கொண்டு வருவதற்காக மோகினி சிறிது வருந்தினாள். சிறிதே நேரந்தான். ஆமையோடு தன்னை ஒப்பிட்ட அந்த மனிதரை, கெளரவமாக குடும்பம் நடத்தி அவர்களோடு ஐக்கயமாக ஒன்றி ஒருமையுடன் வாழ நினைத்த தன்னைப் பிஞ்சில் பழுத்தவள் என்று சொன்ன அந்தக் கிழத்தை, அவர் மகனின் அசுரப் பகுதியைத் தட்டியெழுப்பிப் பழி வாங்குவ தென்ற வைராக்கியத்துடன் அலுவலகம் புறப்பட்டாள், மாலையில் திரும்பி வந்ததும், சீனிவாசன் அவளிடம் வக்கீல் நோட்டீஸ் விடப்பட்டதை ஆதியோடந்தமாக விவரித்தான். அவள் கேட்காததுமாதிரி கேட்டாள். அவ னுக்கு என்னவோ போலிருந்தது வழக்கமாகக் கேட்கப் படும் நீங்க சாப்பிட்டாச்சா என்னால ஒங்களுக்குப் பாவம்