பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 1.5 வீட்டுக்கு டெலிபோன் செய்து, மாமி...மாமாவுக்கு டயர் டாய் இருக்காம். நான் போகச் சொன்னால் மாட்டேங்றார். நீங்களாவது சொல்லுங்கோ," என்பாள். அவள் மனைவியின் மிரட்டலுக்கு பயந்தோ அல்லது வசீகரிக்கப்பட்டோ, புறப் படும்போது, என்னைவிட ஒங்களுக்கு ஒங்க ஒய்ப்தான் உசத்தி. நான் சொன்னவுடனே போனா என்ன?' என்பாள். சுந்தரம், கிறங்கிப்போவார். அந்தமாதிரி சமயங்களில், லீலா மீது படுகோபம் வரும். இவள் வயதுக்காரி தான். ஆனால் சரியான சிடுமூஞ்சி. அவள் சிரித்து அவர் பார்த்த தில்லை. இவளை சிரிக்காமல் பார்த்ததில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அந்த மூதேவி வந்து, இந்த சீதேவியைத் துரத்திவிடும். மொத்தத்தில் மூன்றாண்டு காலமாகப் பணி புரியும் லீலா மூன்றுமாத பழக்கம் போலவும், மூன்றுமாத மோகினி மூவாண்டு சிநேகிதி போலவும் அவருக்குத் தோன்றியது. அவர் மெளனத்தில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்ததால், மோகினிக்கு போரடிக்க ஆரம்பித்தது. டெலெக்ஸ் சமாசாரங்களை உற்றுநோக்கிக்கொண்டே பேசினாள். "எடிட் பண்ணிக்கொடுங்க ஸார்! அப்புறம் ஒரு விஷயம் ஸ்ார்! நான் பேப்பர்களை உங்ககிட்ட டைரெக்டா வைக்கிறது அவருக்குப் பிடிக்கல. என் மூலத்தான் அனுப் பணுமுன்’னு நேத்து கத்தினார்.’’ யாரு, சங்கரா? அவன் கிடக்கான் விடு. இக்நோர் ஹிம்...”* அதெப்படி ஸ்ார்...? அவர் பார்வையே சரியில்ல! எனக்குப் பயமா இருக்கு!' டோன்ட் ஒர்ரி. ஐ வில் ஷோ ஹிம் ஹிஸ் பிளேஸ்.' உங்கள எரும மாட்டுத் தலையன்னு வேற பியூன்க கிட்ட சொல்றார் ஸார்!"