பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 117 என்னால நம்ப முடியல...நேத்துகூட டெப்திரி ராமனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தேன்." அந்த ஒரு ரூபாய்ல முக்கால் ரூபாய செலவழிச்சிட்டு மீதிக் காசுக்கு ஒங்களுக்கு எதிராவே மொட்டப் பெட்டிஷன் போட்டிருப்பான்! " ஒஹோ! அதுகூட நடக்குதோ...' இன்னும் எவ்வளவோ இருக்கு. நீங்க வெளுத்ததெல் லாம் பாலுண்னு நினைக்கிறீங்க. இனிமே நினைக்கமாட்டேனே. நானா எருமைத் தலையன்...' ஏன் ஸார் அதையே சொல்லிக்கிட்டு. சந்திரனப் பாத்து நாயி குலைச்சா குலைக்குது. ஆனா நான் விடறது இல்ல, இப்படித்தான் போன வெள்ளிக்கிழமை ஏண்டா மானேஜர் கன்னம் வீங்கியிருக்கு. ஒய்ப்கிட்ட உத வாங்குனா னான்னு’ ஏஎம், ராமன் கிட்ட கேட்டாரு உடனே நான் ஏன் மிஸ்டர் சங்கர் பாஸ் முன்னால வெண்ணயா குழஞ்சிட்டு பின்னால சுண்ணாம்பா எரிச்சா என்ன அர்த்த" முன்னு பட்டுன்னு கேட்டேன்.'" தேங்க்யூ அதுக்கு அவன் என்ன சொன்னான்?" வேண்டாம் ஸார், விட்டுடுங்க. அனாவசியமா கோபப் படுவீங்க. ஏற்கனவே உங்களுக்கு பிளட் பிரஷர்.'

  • நோ...நோ...அவன் இப்ப என்ன சொன்னான்னு சொல்லலேன்னாதான் பிரஷர் ஏறும். பிளீஸ், டெல் மி டெல் மி...'

'இது என்ன ஸார் வம்பாப் போச்சு. நீயே டெம்பரரி... இன்னும் ஒரு வாரத்துல உனக்கு ஒலை கிழியப்போவுது. நீ எனக்கு புத்தி சொல்றீயா'ன்னு என்மேல் சீறினான். சீறினா சீறிட்டுப்போறான்... விட்டுத்தள்ளுங்க!'