பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சு. சமுத்திரம் நோ... நோ... ஒன்ன இங்க ரீடெய்ன் பண்றனா இல்லியான்னு பாரு இதற்காக டில்லிக்கு வேணுமுன் னாலும் ஒருவாட்டி போயிட்டு வருவேன்!" மானேஜர் காலிங்பெல்லை அழுத்தினார். ஸ்டெனோ வந்தாள். தேனாம்பேட்டையில் நடக்கவிருக்கும் பிரும் மாண்டமான எக்ஸிபிஷனில், கம்பெனி ஒரு ஸ்டால் போட விருப்பதால், திறமையாக வேலை பார்க்கும் மோகினியின் சர்வீஸை மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒரு நோட் டிக்டேட் செய்தார். பிறகு கீப் இட் சீக்ரட்" என்று அவளை எச்சரிக்க, அவளோ மோகினியை எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டு வெளியேறினாள். மோகினி கண்களில் நன்றி குலுங்க அவரை நோக்கினாள். பிறகு, "என்னால ஒங்களுக்கு சிரமம்' என்றாள். அப்படிச் சொல்லும்போது அவள் உதடுகளைக் குவித்தவிதமும், உடம்பைக் குழைத்த விதமும், நாற்பத்தைந்து வயது சுந்தரத்தை, இருபத்தைந்தில் கொண்டுவந்து நிறுத்தியது. ஆகையால், அவர் சிறிதுநேரம் பேசாமல் இருந்தார். பிறகு அவளுக்கு நல்லது செய்துவிட்ட திருப்தியில் அவர் படிப்படி யாக சுயமாகிக் கொண்டிருந்தார். பிரஷரும் இறங்கியிருக்க வேண்டும். ஹீரோ மாதிரி பேசினார். டோண்ட் ஒர்ரி. மானேஜிங் டைரெக்டர் என் பெர்ஸனல் பிரண்ட். எப்படியாவது இன்னொரு அடிஷனல் போஸ்ட் வாங்கி உன்னை போடுறேன். ஆனால் இந்த ஜெனரல் மானேஜர் ஒரு சும்பன்...தலைக்கிறுக்கன். எப்டி சரிக்கட்டுறதுன்னு யோசிக்கிறேன். இல்லன்னா மேலதிகாரி யைத் தரக்குறவா பேசின. சங்கரை இப்பவே சஸ்பெண்ட் பண்ணியிருக்கலாம். எதுக்கும் யோசிக்கிறேன்! ஒண்ணும் முடியாமபோனா லீலாவ எப்டியாவது தூக்கிட்டு உன்னை போட்டுறேன்.'" "ஒரு பொண்ணக் கெடுத்துவர்ற உத்தியோகம் ஒரு உத்தியோகமா? எனக்கு வேண்டாம் ஸார் 1 ஆமா, லீலா சரியான கர்வியாமே!'