பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சு. சமுத்திரம் அழுதாள். அடடே, நான் என்னம்மா சொன்னேன். நீ ஏன் இப்படி அழுவுற" என்று பதட்டப்பட்டபோது சத்தம் போட்டே அழுதாள். "இதோ பாரு. நான் ஏற்கனவே பிரஷ்ஷர்ல கஷ்டப்படுறவன். தயவுசெய்து அழகுறத நிறுத்து’ என்று சொன்னபோது, அவளும் அழுகையை நிறுத்திவிட்டு விக்கி விக்கிப் பேசினாள்.

  • நான் பொறந்திருக்கக்கூடாது ஸார்... நான் பாவி லார் அவர் கிட்ட எவ்ளவோ சொன்னேன். ஒங்கப்பா வுக்கு என்னைப் பிடிக்கல. நான் ஒங்க குடும்பத்துல குழப்பத்த கொடுக்க விரும்பல. என்னை மறந்துடுங்கன்னு" எத்தனையோ தடவ சொன்னேன். ஆனால் அவரு நீ என்னைக் கட்டிக்காட்டா கடலுல விழுந்து சாவேன். இல்லன்னா விஷத்த குடிப்பேன்’னார். ஒருநாள் விஷப் பாட்டிலைப் பையில இருந்து எடுத்தார். எனக்கு ஒன்னும் புரியல! கடைசில அவரோட உயிரக் காப்பாத்துறதுக்காவ ஊரு உலகத்தைப்பத்திப் பாராம சம்மதிச்சேன், எங்க மாமா சொத்துங் கிடையாது, சுகமும் கிடையாதுன்னுட்டார். இவரு குதிச்சாரு நான்தான் நீங்களும் சம்பாதிக்கிறீங்க. நானும் சம்பாதிப்பேன். அவரு சொத்தை அவரே வச்சிக் கிடட்டு முன்னேன். ஆனால் அவரு எனக்குத் தெரியாமலே வக்கீல் நோட்டீஸ் கொடுத்து வழக்கு போட்டிருக்கார். ஏன்னு கேட்டா இதுல தலையிடாதேன்னு சொல்லிட்டாரு. அதுக்குமேல பேசினா அடிச்சிருப்பாரு. நான் என்ன ஸார் பண்றது? ஒவ்வொரு ஜனமும் என்னத்தான் தப்பா நெனக்கிது. நான்தான் அவர மயக்கி அப்பனுக்கும் பிள்ளைக் கும் ஆகவிடாம பண்ணிட்டேன்னு கசாமுசான்னு பேசுதுங்க. நீங்களே சொல்லுங்க ஸார். நான் என்ன ஸார் பண்ண முடியும்? நான் பாவி ஸார்! நான் பிறந்திருக்கவே கூடாது 6ո)rri... *

மோகினி மீண்டும் அழுதாள். மானேஜர் இப்போது அவள் தோளைத் தட்டிக்கொடுக்கத் துடித்த கைகளை அடக்கிக்கொண்டார்.