பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 3 அம்மாவையும், குட்டியில் தன்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தவன் தோளில் பட்ட வளைக்கரத்தை நிமிர்த் தியபடியே, அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். பானு படபடப்பில் கேட்டாள். நாயுங்கள நல்லா துரத்திபிட்டிங்களா, பழைய படியும் வரப்போகுதுங்க. இங்கேயே உட்காருவோமா?’’ உட்கார்ந்தார்கள். மீண்டும் மண் கொள்ளப்போன அவன் கையை, அவள் பிடித்துக்கொண்டாள். மஞ்சள் நிறப் புடவை மங்கலப் புடவைபோல் தோன்ற, சிவப்பு கரங்களில் உராய்ந்த தங்கக் காப்புகள் முத்து மேடுகளோடு குலுங்க. அவன் இடையில் கைக்கோர்த்தபடியே, பானு கடலைப் பார்த் தாள். இந்தச் சமயத்தில்தான் வாங்குவார்கள் என்பதுபோல், கடலை கொண்டு வந்த விடலைப் பையனை கண்களால் தூரத்தி னாள். பிறகு அவனை உசுப்பினாள். ...போவோமா? அப்பா காத்திருப்பார்.' எனக்கு பயமா இருக்கு பானு!' வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக் கிறீங்களே!” இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்!'" என்ன டியர்... உளறுlங்க, சொல்றது. சினிமாவுக்குப் பொருந்தும். டிராமாவுக்குப் பொருந்தும் பட் இதுக்குப் பொருந்துமா? ஞாபகம் இருக்கட்டும். இன்னைக்கு நடக்கப் போறது பாதிக் கல்யாணம்...”* நீ பாதியை நினைக்கிறே! நான் மீதியை நினைக் கிறேன். எனக்கு பயமா இருக்கு பானு!’ ..அப்படின்னா ஒன்னு செய்யலாம். அதோ, அந்த படகு பக்கமாப் போவோம். என் புடவையை நீங்க கட்டிக் கலாம். ஒங்க வேட்டியை நான் கட்டிக்கிறேன்.'