பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 125 அவள் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள். இறுதியில் விரக்தியில் ஏற்பட்ட உறுதி, அவன் நெஞ்சைக் கெட்டியாக் கியது. அவளைப் பார்த்து, வா... போகலாம்' என்றான். நான் எதுக்கு? நீங்க போயிட்டு வாங்க!' என்ன பேசுறன்னு யோசித்துப் பாத்தியா, ஒன் மாமனார் இறந்துட்டாரு." அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?’’ ஒன்ன இறக்கச் சொல்லல! நாம ரெண்டுபேருமா போய் அம்மாவோட கஷ்டத்த இறக்குவோம்.' என்னக்கி என்னை மருமகளா ஏத்துக்க மாட்டேன்னு அவரு தள்ளிவச்சாரோ... அன்னைக்கே அவரை நானும் தள்ளிவச்சிட்டேன். என்னைப் பொறுத்த அளவுல அவரு மூணாவது மனுஷன், மூணாவது மனுஷங்க சாவுக்கெல்லாம் நான் போறதுல்ல!"

  • நீ வாரியா இல்லியா." "சமூணு மணிநேரமா லைட்ல நின்னு காலுல்லாம். வலிக்கிறது. என்னால முடியாது'

வாரியா... இல்லியா?" முடியாதுன்னா, முடியாது.' மனைவியின் கழுத்தை அங்கேயே நெறித்துவிடலாமா என்ற வேகம் வந்தது அவனுக்கு ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, அவளை வெறித்துப் பார்த்தான். பின்னர் "ஒன்னைக் கட்டுன எனக்கு இன்னமும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும்" என்று தன்பாட்டுக்குச் சொல் விக் கொண்டே வெளியேறினான்.