பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 127 மோகினிக்குச் சிரமம் எதும் இல்லை. ஜீவானாம்சம் கோரி வுழக்குப் போடப்போவதாக மறுநாளே வக்கீல் நோட்டீஸ் விட்டாள். வக்கீல் இளைஞர். அவள், அவருக்கு :பீஸ்' கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அதோடு தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம், சீனிவாசன் அவளுக்கு ஒரு வழி செய்யவில்லை என் றால், அவன் ஒரு வழியாகி விடுவான் என்று வேறு மிரட் டப்பட்டான். மான அவமானத்திற்குப் பயந்த அம்மாவின் வேண்டுகோள்பேரிலும், வீட்டு விவகாரங்கள் கோர்ட்டுக்குப் போனால், தங்கைகள் இருவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியது வரும் என்பதை உணர்ந்ததாலும் சீனிவாசன், தந்தை தன் பெயருக்கு எழுதிக்கொடுத்திருந்த அடையாறு வீட்டுப் பத்திரத்தை அவள் பெயருக்கு மாற்றிவிட்டு அவள் கையெழுத்துப் போட்ட விடுதலைப் பத்திரத்தை வாங்கிக் கொண்டுபோனவன் போனவன்தான். எல்லாம் மூன்று நா ட் க ளி ல் முடிந்துவிட்டன. கணவனைப் பிரிந்தாலும், அவன் நினைவைப் பெரிதும் போற்றிப் புகழ நினைத்த மோகினி, நான்காவது நாளே, அவன் கொடுத்த அடையாறு வீட்டிற்குக் குடிபோய் விட்டாள். தாலி கட்டிய நேரம் நல்லநேரமாக இல்லையென் றாலும், தாலி இறங்கிய நேரமும் அவள் அந்த வீட்டுக்குப் போன நேரமும் நல்லநேரமாகத் தான் இருக்க வேண்டும். பப்ளிவிட்டி மானேஜரின் வேண்டுகோள்படி, கம்பெனியின் தலைமையிடம் அவள் மூன்றுமாதம் மேற்கொண்டும் வேலை யில் நீடிப்பதற்கு அனுமதியளித்தது. அதற்காக, அவள் வீட்டிலேயே ஒரு பார்ட்டி கொடுத்தாள். பப்ளிவிட்டி மானேஜர், அவரைப் பிடிக்காத மேலதிகாரியான ஜெனரல் மானேஜர், பீஸ் வாங்காத வக்கீல் குடும்ப விவகாரங்களைக் கோர்ட் வழக்கென்று விடாமல் பார்த்துக்கொள்ளும் - குடும்ப' இன்ஸ் பெக்டர்- அவர்-இவர் என்று பல ரக