பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் I 31 அந்தக் குழந்தையை மோகினி கிள்ளிக்கொண்டிருப்பதை லீலாவால் பொறுக்க முடியவில்லை. சங்கரிடம் சொல்லிப் பார்த்தாள். அவனோ, மோகினிக்கும் மேலதிகாரியான அந்த அவிஸ்டெண்ட் பப்ளிஸிட்டி மானேஜரோ, மோகினி யிடம் அன் அபிஷியலாக ஸ்ர்ரண்டர்" ஆகிவிட்டான். சாட்சிக்காரனை விட சண்டைக்காரி தேவலை என்று நினைத்த வீலா, மிஸ் மோகினி...எதுக்கும் லேஅவுட்டை நான் ஒரு தடவை பாத்துடுறேன். கொஞ்சம் காட்டுறீங் களா?" என்று தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளுக்கு முன்னால், பிச்சை கேட்பதுபோல் கேட்டாள். மோகினி அவளை ஏற இறங்கப் பார்த்தாள். லீலா உடுத் திருந்த அந்த வெள்ளை வாயில், இந்த நைலக்ஸ் காரியை என்னவோ செய்திருக்க வேண்டும். அச்சமில்லா மலும், அவசரப்படாமலும், பகட்டைக் காட்டாமலும், சிரிப்பதுபோல் தோன்றிய அவள் கண்கள், இவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். பாலீஷ் போடாமல் பளபளப்பாக மின்னிய நகங்கள், இவளைக் கிள்ளுவதுபோல் தோன்றி யிருக்க வேண்டும். மெதுவாக இனிமையைப் பிரதிபலிக்கும் அவள் குரல், இவள் மனதில் கூச்சலை எழுப்பியிருக்க வேண்டும். அவள். தொப்புளுக்கு மேலே கட்டியிருந்த புடவை இவளுக்குப் புழுக்கத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவள் காலில் போட்டிருந்த செருப்புகள் இவளை அடிப்பதுபோல் வலித் திருக்க வேண்டும். மோகினி அவளை சிறிது நேரம் முறைத்துவிட்டு, குட்டி போட்ட பூனை மாதிரி முனகிக்கொண்டே பப்ளிவிட்டி மானேஜரின் ஏர் கண்டிஷன் அறைக்குள் போன வேகத்தி லேயே, ஸார்...நீங்க எனக்குப் பாஸா, இல்ல இந்த லீலா பாஸான்னு இப்ப தெரியணும்' என்று அங்கேயே கூச்சல் போட்டாள். அவள் வைத் திருக்கும் பரீட்சையில் பாஸாக” வேண்டும் என்று நினைத்த பப்ளிவிட்டி சுந்தரம், விவகாரத் திற்கு பப்ளிஸிட்டி கொடுக்க வேண்டாம் என்று அவளை