பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 135 சீனிவாசன் பெரிதாகத் தான் எடுத்துக்கொண்டான். அப்பாவின் சாவுக்கு அவள்தான் எமனாக வந்தவள் என்று அவன் நினைத்ததோடு முணுமுணுக்கத் துவங்கினான். ஒருநாள் மோகினி கணவனிடம் வலிய வந்தாள். ஒரு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி குங்குமப்பூ வாங்கிட்டு வாங்க... நம்ம ரெண்டுபேரையும்விட குழந்தை நிறமா பிறக்க வேண்டாமா என்று சிரித்துக்கொண்டே சொன்ன தில், சீனிவாசனும் லேசாகப் புன்முறுவல் செய்தான். புறப் பட்டான் : - குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்று சதா நினைத்துக்கொண்டிருந்த மோகினி, காலையில் ஏழு மணிக்குப் போன கணவன் ஒன்பது மணிவரை திரும்பாத தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சாயங்காலம் வந்து பாலில் கலந்து குங்குமப்பூவை சாப் யிடலாம் என்று நினைத்து, மனதைத் தேற்றிக்கொண்டு ஆபீஸ் போனாள். அதேசமயம், அந்த இடைவெளியினால் குழந்தையின் கலர் கொஞ்சம் குறையுமோ என்றுகூடச் சங்கடப்பட்டாள். மாலை வந்தது. குங்குமப்பூ நினைவுடன் வீட்டுக்குத் திரும்பிய மோகினியின் கண்கள் குங்குமமாயின. சீனிவாசன் ஒரு நாற்காலியில் முட்டிக்கால்களைக் கட்டிக்கொண்டு உட் கார்ந்திருந்தான். ஏகாம்பரம் மருமகன் சார்பில் பேசினார். ஒனக்கு வாச்சவர் அஞ்சு ரூபாய் நோட்டை எவனோ பிக்பாக்கட் அடிச்சிட்டான்னு சொல்றார். குங்குமப்பூவுக்குப் பதிலா ஒரு ஸ்டார் சிகரெட்டை பிடிச்சிக்கிட்டு வாரார்: எல்லாம் ஒன்னோட தலையெழுத்து, கண்ணைத் திறந்து கிட்டே பாழுங் கிணத்துல விழுந் திட்ட...' மோகினி அவனையே முறைத்துப் பார்த்தாள். பிக் பாக்கட் அடிச்சிட்டான்’ என்று அவன் சொல்லியிருந்தால் அவள் கோபம் தணிந்திருக்கலாம். ஆனால் அவனோ,