பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 36 க. சமுத்திரம்

  • அசால்டாக உட்கார்ந்து இன்னொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். மோகினிக்குப் பற்றி எரிந்தது. அழகான குழந்தைக்கு ஆசைப்படக்கூட உரிமை இல்லையா...பிக்பாக் கட் அடிச்சிருந்தா, அந்த முகமே காட்டிக் கொடுத் திருக்குமே? சிகரெட் குடிக்கிற பழக்கம் வந்துட்டால் இப்படித்தான்...

மோகினி பயங்கரமாகக் கத்தினாள்: "குங்குமப்பூ இல்லாம இந்த வீட்டுக்குள்ள வரப்படாது. மொதல்ல அத வாங்கிக்கிட்டு வந்து மறுஜோலி பாருங்க. சே. கொஞ்சமாவது சொரணை வேண்டாம்...' இந்தச் சமயத்தில் ஏகாம்பரமும் இடைச்செருகல் செய்தார். "இவரு அப்பன் ஒன்னை ஆமைன்னு சொன்னானாம். இப்ப உயிரோட இருந்தா யாரு வீட்ல எந்த ஆமை புகுந்து துன்னு தெரிஞ்சிருப்பார்." சீனிவாசனுக்கு சப்த நாடிகளும் துடித்தன. மாமா... இதுக்குமேல ஒமக்கு மரியாத இல்ல. இனிமே பேசினா மரியாதை கெட்டுப் போயிடும்...' என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். மோகினிக்கு இது அதிகப்படியாகத் தெரிந்தது. கணவனை நெருங்கி, பெண்டாட்டிக்குத்தான் ஒண்ணும் வாங்கிக் கொடுக்கிற வக்கில்ல... அவள் தந்த காசையாவது திருப்பித்தர யோக்கியதை வேண்டாம்? என் னோட புருஷன்னு சொல்லிக்க உங்களுக்கு வெட்கமா இல்லே?" என்று கையை நீட்டிப் பேசினாள். பேசியவள் திடீரென்று கன்னத்தில் கை வைத்தாள். காரணம் சீனிவாசன் அவள் கன்னத்தில் பளிர் என்று அடித்து விட்டு, இடுப்புப் பக்கத்தில், காலால் உதைத்துவிட்டு, பின்னர் செய்த தவறுக்குப் பிரயாச்சித்தமும் செய்ய நினைக்காதவன்போல், என்னடி சொன்னே..." என்று