பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 0. சு. சமுத்திரம் இனிமே ஒங்க சாவகாசமே வேண்டாம். ஒங்க காற்று பட்டாலே கலாவுக்குக் கெட்ட புத்தி வந்துடும். என் .மகளை என் இஷ்டப்படி வளர்க்கப் போறேன். இதுக்கு யார் குறுக்கே நின்னாலும் அவங்க எனக்குத் தூசி. குடிகாரன் புத்தி விடிஞ்சா போச்சு. நீங்க விடியறது வரைக்கும் இருக்க வேண்டாம். பிளீஸ்... போயிடுங்க! தமக்குள்ள ஒட்டும் கிடையாது. உறவும் கிடையாது. சீனிவாசன் கோபமாகக் கையைத் துரக்கினான். அந்த அடி குழந்தைமீது பட்டாலும் பட்டுவிடலாம் என்கிற பயம் தைரியமாக மாற, மோகினி தன் முகத்தில் விழப்போன அவன் கரத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டே, * மிஸ்டர்...என்னை நீங்க போலீஸ் வரைக்கும் துரத்த மாட்டிங்கன்னு நினைக்கிறேன்’ என்றாள். பட்டை திட்டிய சீனிவாசன், அதிர்ச்சி அடைந்தவனாய் வெளியேறினான். ஏகாம்பரம், மாப்பிள்ளை 1 இந்தத் தடவையாவது போயிடு: முன்போலத் திரும்பி வந்துடாதே!' என்று சத்தம் போட்டார். அவர் சொன்னதாலோ என்னவோ சீனிவாசன் திரும்பவேயில்லை. மாதங்கள், ஆண்டுகளாயின. கல. இப்போது மூன்று வயதுக்காரி, மோகினி எங்கே போனாலும் மகளை எடுத்து வைத்துக் கொண்டே போனாள். நான்காவது வயதில் அவளை எல். கே. ஜி. யில் சேர்ப்பதற்காக, இப்போதே இடம்பிடிக்கும் வேலையிலும் எது நல்ல பள்ளிக்கூடம் என்பதைக் கண்டு பிடிப்பதிலும் ஈடுபட்டாள். பப்ளிஸிட்டி மானேஜர் சுந்தரம், லீலா லீவில் போகும்போதெல்லாம் அவளுக்குத் தற்காலிக வேலைகள் தந்தார். அடையாறு வீட்டில் இருந்து வாடகை வந்ததால்,