பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 141 மோகினி சுந்தரதையோ அவர் கொடுத்த வேலையையோ சிரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அம்மா’ என்று. சொல்லும் மகளை செல்லமாக அடக்கி அவளை மம்மி" என்று சொல்லவைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் குடும்ப நேரம் சரியாக இல்லை. ஏகாம்பரத்தை விட்டு, சினிமா யோகம், கழற்றிக் கொண்டது. அங்கே பல ஏகாம்பரங்கள் பற்பல ஜாதகக் கட்டுக்களோடு கிளம்பியதே காரணம். அதோடு, நமது ஏகாம்பரம் ஆயிரக்கணக்கில் பொய் சொன்னால், புதிய ஏகாம்பரங்கள் லட்சக்கணக்கில் பொய் சொல்லத் துவங்கின தால் இந்த சின்னப் புளுகர்களின் பொய் எடுபடவில்லை. அதோடு, நூறுநாள் ஒடும் என்று அவர் கணித்த ஒரு படம் நூறு ஷோ கூட ஓடாததால், முன்னுாறு ரூபாயைத் தட்சணையாகக் கொடுத்த அந்த படத்தயாரிப்பாளர், இப்போது அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுத்ததாக வாதாடி, ஏகாம்பரத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த லட்சணத்தில் அடையாறு வீட்டில் குடியிருந் தவர்கள் நொடித்துப்போய் வாடகைப் பணம் கொடுப்பதை நிறுத் திவிட்டார்கள். காலி பண்ணச் சொன்னால் கோர்ட் டுக்குக் கூப்பிட்டார்கள். மோகினி, தானும் அம்மாவும் அப்பாவும் பட்டினியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால் கலா... அவள் கண்ணுக்குக் கண்ணாக வளர்க்கும் கலாவிற்கு, கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதை, அவளால் தாங்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து, கலாவிற்கு நல்ல ஜூரம். லேசாக பிட்ஸ் வருவதுபோலவும் இருந்தது. 102 டிகிரியைத் தாண்டிவிட்டது. ஏகாம்பரம் ஒப்பாரியே வைக்கத் துவங்கி,